இத்தாலி முன்னாள் கால்பந்து அணித்தலைவருக்கு சிறை
உலகக் கிண்ணப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இத்தாலி அணியின் தலைவர் பேபியோ கன்னவாரா, நீதிமன்றத்தின் உத்தரவுகளை மீறியதற்காக 10 மாதங்கள...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_36.html

உலகக் கிண்ணப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இத்தாலி அணியின் தலைவர் பேபியோ கன்னவாரா, நீதிமன்றத்தின் உத்தரவுகளை மீறியதற்காக 10 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இத்தாலி கால்பந்து அணியின் முன்னாள் தலைவர் பேபியோ கன்னவாரா மீது கடந்த அக்டோபர் மாதம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக நேப்பிள்ஸ் நகர நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இது தொடர்பாக கன்னவாராவில் ஒரு மில்லியன் டொலர் மதிப்புள்ள சொத்துகளை கையகப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதில் கன்னவாராவுக்கு சொந்தமான நீச்சல் குளமும் ஒன்று.கையகப்படுத்தப்பட்ட நீச்சல் குளத்திற்கு கன்னவாரா செல்லவும் நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
இந்நிலையில் கையகப்படுத்தப்பட்ட நீச்சல் குளத்திற்கு தனது மனைவி மற்றும் சகோதரருடன் தடையை மீறி கன்னவாரா சென்றதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கன்னவாரா அவரது மனைவி மற்றும் சகோதரருக்கு 10 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மூன்று பேரும் மேல் முறையீடு செய்தததையடுத்து தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
2006 ஆம் ஆண்டு நடந்த உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் பேபியோ கன்னவாரா தலைமையில் தான் இத்தாலி அணி பிரான்ஸை வீழ்த்தி உலகக் கிண்ணத்தை வென்றது. தற்போது 41 வயது நிரம்பிய கன்னவாரா கால்பந்து உலகின் உயரிய “பல்லான் டி ஆர்.” விருதையும் பெற்றவர்.


Sri Lanka Rupee Exchange Rate