மஹிந்தவின் தோல்விக்கு அவரே காரணம்! - என்கிறார் அமைச்சர் சம்பிக்க ரணவக்க
ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோல்வியடைந்தமைக்கு அவரே காரணம் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். “மஹிந்த ராஜபக்ச அவராலேய...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_29.html

ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோல்வியடைந்தமைக்கு அவரே காரணம் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். “மஹிந்த ராஜபக்ச அவராலேயே தோற்றார். அவருக்கு தேசிய கொள்கையொன்று இருக்கவில்லை. மஹிந்த தேசப்பற்றுடன் செயற்படவும் இல்லை.அவரிடம் டபிள் கேம் தான் இருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கினார்.
சில வானொலிகள், தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகள் மஹிந்தவின் பணத்தினால் உருவானவை. இதனை அச்சமின்றி தைரியமாக நான் கூறுவேன். இந்த ஊடக நிறுவனங்கள் நாட்டுக்கள் இனவாதத்தை தூண்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன" எனவும் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate