அன்பு மகனை கொன்று ஆசை கணவனுக்கு பரிசாக அளித்த கொடூர தாய்
கணவனின் பிறந்த நாளுக்கு பெற்ற மகனை கொலை செய்து பரிசு பொருளாக வழங்க முயற்சித்த கொடூர தாய்க்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. மெக...


மெக்சிகோ நாட்டில் உள்ள திஜுனா (Tijuana) நகரில் மிகுயெல் பெல்ட்ரான்-கரினா லுனா சான்டோவல்(Miguel Beltran - Karina Luna Sandoval) என்ற தம்பதியினர் மகன் மிகுயெல் சாலுடன் (Miguel Saul Age-7) வசித்து வந்துள்ளனர்.
கரீனாவுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் Miguel Beltran தனது மனைவியையும் மகனையும் விட்டு சில மாதங்களுக்கு முன் பிரிந்து சென்றுவிட்டார்.
ஏழு வயது மகனுடன் தனியாக வசித்து வந்த கரீனாவிற்கு Gonzalo del Rio Hernandez Age-23 என்ற நபருடன் தொடர்பு ஏற்பட்டது.
இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்ததுடன், ஒரு புது வாழ்க்கையை தொடங்க முடிவு செய்தனர்.
தனது மகன் புதிய வாழ்க்கைக்கு தடையாக இருப்பான் எனக்கருதிய கரீனா, அவரது கள்ளக்காதலனுடன் இணைந்து திட்டம் ஒன்றை தீட்டியுள்ளார்.
இதனிடையில், தனது முன்னாள் கணவனுக்கு பிறந்த நாள் நெருங்கி வருவதை அறிந்த கரீனா, அவருக்கு வாழ்நாளில் மறக்க முடியாத பரிசு அளிக்க வேண்டும் என தீர்மானித்தார்.
தனது புதிய வாழ்க்கையும் தொடங்க வேண்டும். அதே சமயம், தனது முன்னால் கணவனையும் பழி வாங்க வேண்டும் என நினைத்த அவர், தனது சொந்த மகனையே கொன்று பிறந்த நாள் பரிசாக அளிக்க முடிவு செய்தார்.
கடந்த டிசம்பர் மாதம் 20ம் திகதி, தனது கணவர் வீட்டின் பின்புறத்தில் நின்றுகொண்டு இருப்பதாகவும், அவருடன் சென்று விளையாடு எனவும் தனது மகனிடம் கூறியுள்ளார்.
அப்போது ஆவலுடன் வீட்டின் பின்புறத்திற்கு ஓடிய Miguel Saul, அங்கு தனது தாயாரின் கள்ளக்காதலன் ஒரு பெரிய கோடாரி ஒன்றை வைத்திருந்ததை பார்த்து அதிர்ச்சியுற்றான்.
சிறுகணமும் தாமதிக்காத அந்த கள்ளக்காதலன் 7 வயது சிறுவனை சரமாரியாக தாக்கியுள்ளான்.
அந்த வேளையில் சிறுவன் வலியால் பலத்த குரல் எழுப்ப, அருகில் குடியிறுந்தவர்கள் அங்கே ஓடிவந்து அந்த கள்ளக்காதலனை கையும் களவுமாக பிடித்தனர்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். ஆனால், இரண்டு வாரங்கள் கழித்து சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
இதன்பின் கரீனாவின் கள்ளக்காதலன் அனைத்து உண்மைகளையும் பொலிசாரிடம் ஒப்புக்கொண்டதால், கரீனாவை கைது செய்த பொலிசார் வழக்கு பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், பெற்ற மகனையே கொடூரமாக கொல்ல துணை நின்ற காரணத்திற்காக கரீனாவிற்கு 42 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளனர்.