உண்மையான சுதந்திரத்தை வழங்க மறுத்த மகிந்த ஆட்சி: சந்திரிக்கா
யுத்தம் நிறைவுற்ற போதிலும் கடந்த கால அரசாங்கத்தினால் உண்மையான சுதந்திரத்தை மக்களுக்கு பெற்றுக் கொடுக்க முடியவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_992.html

பத்தரமுல்லையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடந்த 30 வருடங்களாக இடம்பெற்று வந்த யுத்தத்தை கடந்த கால அரசாங்கம் நிறைவுக்கு கொண்டு வந்த போதிலும்,
நாட்டு மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான எவ்வித ஏற்பாடுகளையும் செய்து கொடுக்க மறந்து விட்டது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
யுத்தத்தை அழித்து விட்டதாக மார்தட்டி கொண்ட போதிலும், யுத்தத்தின் பின்னரும் மக்கள் எந்தவித சுதந்திரத்தையும் அனுபவிக்கவில்லை.
அத்துடன் யுத்த களத்திலிருந்து போராட்டம் நடத்தியவர்கள் இராணுவத்தினரே, ஆனால் ஊழலில் ஈடுப்பட்டவர்களே யுத்தத்தை நிறைவு செய்ததாக போலியாக மார்தட்டி கொண்டிருக்கின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்


Sri Lanka Rupee Exchange Rate