ரஷியாவுக்கு எதிராக, 12 F-15 இடைமறிப்பு விமானங்களை அமெரிக்கா ஐரோப்பாவிற்கு அனுப்புகிறது
ரஷியாவிற்கு எதிராக பாதுகாப்பை பலப்படுத்தும் வண்ணம் ஐரோப்பாவிற்கு அமெரிக்க ராணுவம் 12, F-15 இடைமறிப்பு விமானங்களை அனுப்புகிறது என்று தகவல்...
http://kandyskynews.blogspot.com/2015/03/12-f-15.html
ரஷியாவிற்கு எதிராக பாதுகாப்பை பலப்படுத்தும் வண்ணம் ஐரோப்பாவிற்கு அமெரிக்க ராணுவம் 12, F-15 இடைமறிப்பு விமானங்களை அனுப்புகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
அமெரிக்க ராணுவத்திற்கு சொந்தமான F-15 இடைமறிப்பு விமானங்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏப்ரல் மாதம் மத்தியில் அனுப்ப உள்ளது என்று ஐரோப்பியாவில் உள்ள அமெரிக்க விமானப்படை தகவல் தெரிவித்து உள்ளது என்று செய்திகள் வெளியாகி உள்ளது. அமெரிக்காவின் புளோரிடாவில் 12, F-15 இடைமறிப்பு விமானங்கள் மற்றும் 200 விமானப்படை வீரர்கள் அங்கு நிறுத்தப்பட்டு உள்ளனர். ரஷியாவின் கோபத்தில் இருந்து ஐரோப்பிய நோட்டோ நாடுகளை பாதுகாக்க வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது என்று அமெரிக்கா தெரிவித்து உள்ளது.F-15 ஈகிள் இடைமறிப்பு விமானங்கள் நவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டது. ஏர் டு ஏர் ரேடார், எதிரிகளின் இலக்கை மறைந்திருந்து தாக்கும் வகையில் மிகநீண்ட எல்லையில் கண்காணிப்பு அனுமதிக்கும் கருவிகளும் இதில்உள்ளது. F-15 ஈகிள் விமானம் ஏவுகணைகளை கொண்டு செல்லக் கூடியதாகவும், எதிரி விமானங்களை மறைந்திருந்து தாக்கக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டது, மிகவும் நவீனமாக்கப்பட்டது. அமெரிக்கா நெதர்லாந்து மற்றும் பல்காரியா ஆகிய நாடுகளுக்கு F-15 எஸ் விமானங்களை அனுப்ப உள்ளது. 12 ஏ-10 ரகவிமானங்களுக்கு பதிலாக இந்த விமானங்களை அமெரிக்கா பயன்படுத்துகிறது.
ஐரோப்பிய நாடுகளில் ராணுவப் பயிற்சி மற்றும் ராணுவம் குவிப்பு ஆகியவை, ரஷியாவின் கோபத்தில் இருந்து ஐரோப்பிய நாடுகளை பாதுகாக்க தேவையானது என்று அமெரிக்கா தெரிவித்து உள்ளது. இதற்கிடையே உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரச்சனை நீடிக்கும் நிலையில் ஆத்திரமூட்டவும், பதட்டத்தை அதிகரிப்பதற்கான செயல் என்றே மாஸ்கோ பார்க்கிறது என்று செய்திகள் வெளியாகி உள்ளது. இத்தாலி மற்றும் எஸ்டோனியாவிலும் அமெரிக்கா விமானப்படையை வலுப்படுத்தி உள்ளது என்றும் கூறப்படுகிறது.


Sri Lanka Rupee Exchange Rate