ஜனாஸாவை தோண்டுவது தொடர்பில் குடும்பத்தினரின் நிலைபாடு இதுதான்!!
திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும், ரகர் வீரர் வசீம் தாஜுதீனின் ஜனாஸாவை எதிர்வரும் திங்களன்று (10) தோண்டுவதற்கு கொழும்பு மேலதிக...
http://kandyskynews.blogspot.com/2015/08/blog-post_89.html
திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும், ரகர் வீரர் வசீம் தாஜுதீனின் ஜனாஸாவை எதிர்வரும் திங்களன்று (10) தோண்டுவதற்கு கொழும்பு மேலதிக நீதிவான் நிஷாந்த பீரிஸ் இரகசிய பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், அவரது சடலத்தை தோண்டுவதற்கு தாம் மறுப்புத் தெரிவிக்கப் போவதில்லை என வசீமின் சகோதரர் அஸ்பான் தாஜுதீன் தெரிவித்துள்ளார்.
தமது குடும்பத்தினரும் இதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
2012 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தாஜுதீனின் உடல் தெஹிவளை மொஹிதீன் ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
விசாரணைகளின் நிமித்தம் மேற்படி சடலம் தோண்டப்பட வேண்டும் என்பதில் இரகசிய பொலிஸார் உறுதியாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நீதிமன்றின் விசேட வைத்தியர் குழு, பள்ளிவாயல் முக்கியஸ்தர்கள், பிரதேசத்துக்கு பொறுப்பான கிராமசேவை அதிகாரி ஆகியோர் முன்னிலையிலேயே சடலம் தோண்டியெடுக்கப்பட வேண்டுமெனவும், பொலிஸார் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் எனவும் நீதிவான் இன்று மேலும் உத்தரவிட்டார். நன்றி