பொருத்தமானவர்களை மட்டுமே பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யுங்கள் – ஜனாதிபதி

எதிர்வரும் பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்திற்கு பொருத்தமானவர்களை மட்டுமே தெரிவு செய்ய வேண்டியது நாட்டில் உள்ள எல்லா வாக்காளார்களினதும் மிகப...


எதிர்வரும் பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்திற்கு பொருத்தமானவர்களை மட்டுமே தெரிவு செய்ய வேண்டியது நாட்டில் உள்ள எல்லா வாக்காளார்களினதும் மிகப் பெரும் பொறுப்பாகும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தின் நற்பெயரை மதித்து பாதுகாக்கின்ற நாட்டுக்காக பணி செய்யக்கூடிய மிகப் பொருத்தமான வேட்பாளர்களை மட்டுமே தேர்தலில் தெரிவு செய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

மக்கள் தங்களது அறிவு, புத்திக்கூர்மை மற்றும் வேட்பாளர்கள் தொடர்பான முன் அனுபவங்களை வைத்து இந்த தெரிவை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இன்று (07) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற அமைச்சர் மஹிந்த சமரசிங்கவின் இரண்டு நூல்களை வெளியிட்டு வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

´சர்வதேச அரங்கில் ஒரு இலங்கையரின் குரல்´ என்ற சிங்கள மொழி மூலமான நூலும் அந்த நூலின் ஆங்கிலப் பிரதியும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்கள் இலங்கை பாராளுமன்றத்திலும் சர்வதேச மனித உரிமைகள் பேரவையிலும் ஐ.நா. சபையிலும் ஏனைய விசேட சந்தர்ப்பங்களின்போதும் ஆற்றிய உரைகளை உள்ளடக்கியுள்ளது.

அரசியல்வாதிகள் மக்களுக்கான தங்களது கடமைப் பொறுப்புக்களை முறையாக நிறைவேற்றாத காரணத்தினால் அவர்களது நன்மதிப்புக்கு களங்கம் ஏற்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அரசியல்வாதிகள், அரசாங்க ஊழியர்கள் மற்றும் இராஜதந்திரிகள் அவர்களது பதவிகளின் கடமைப் பொறுப்புக்களை ஏற்கின்றபோது மக்களின் அபிலாiஷகளை நிறைவேற்றுவதற்கு அவர்கள் எப்பொழுதும் அர்ப்பணத்துடன் செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அமைச்சர் மஹிந்த சமரசிங்க தனது அறிவு, ஆற்றல் மற்றும் அனுபவங்களைப் பயன்படுத்தி தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் செய்துள்ள சேவைகளை ஜனாதிபதி பாராட்டினார் அத்தோடு அமைச்சர் சமரசிங்கவின் எதிர்கால முயற்சிகள் வெற்றிபெற ஜனாதிபதி தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

Related

தலைப்பு செய்தி 7979339466543122798

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item