சிறுபான்மையினருக்காக குரல் கொடுக்க ஒருபோதும் தயங்கமாட்டேன்!!

களுத்துறை மாவட்ட ஐ.தே.க. வேட்பாளர் பாலித தெவரபெரும  சிறு­பான்மை சமூ­கங்கள் இந்­நாட்டில் பெரும்­பான்மை சுய­நல வாதி­களால் அடக்கி ஒடுக்­கப்­பட...

களுத்துறை மாவட்ட ஐ.தே.க. வேட்பாளர் பாலித தெவரபெரும 
சிறு­பான்மை சமூ­கங்கள் இந்­நாட்டில் பெரும்­பான்மை சுய­நல வாதி­களால் அடக்கி ஒடுக்­கப்­படும் சந்­தர்ப்­பங்­களில் நான் எப்­போதும் அவர்­க­ளுக்­கெ­தி­ராக குரல் கொடுத்தும் வீதியில் இறங்கி போரா­டியும் வந்­தி­ருக்­கிறேன்.

இத­னா­லேயே சிறை செல்­லவும், தாக்­கு­த­லுக்கு இலக்­கா­கவும் நேரிட்­டது. இது உண்­மை­யான போராட்­ட­வா­திகள் எதிர்­கொள்ளும் சவால்தான் என்று முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் தற்­போ­தைய ஐ.தே.க. களுத்­துறை மாவட்ட வேட்­பா­ள­ரு­மான பாலித தெவ­ர­பெ­ரும தெரி­வித்தார்.



Q: சிறு­பான்மை மக்­களின் மனங்­களை வென்­றுள்ள உங்கள் பங்­க­ளிப்பு என்ன? 
பதில்: எல்லா இன மக்­க­ளையும் மனி­தா­பி­மா­னத்­துடன் நோக்கும் அர­சியல் பரம்­ப­ரையில் பிறந்­தவன் நான்.

அதனால் எனது பிர­தேச தோட்டப் பகுதி மக்கள் அனு­ப­விக்கும் அவ­லங்­களை என்னால் பார்த்துக் கொண்­டி­ருக்க முடி­யாது.

அவர்­களின் விடி­வுக்­காக என்னால் இயன்ற உத­வி­களை வழங்கி அவர்­களை முன்­னேற்றப் பாதையில் இட்டுச் செல்ல வேண்டும்,

அவர்­க­ளது பிரச்­சி­னைகள் தொடர்பில் நான் பள்ளிப் பரு­வத்­தி­லி­ருந்தே கவனம் செலுத்தி வந்­தி­ருக்­கிறேன். அது இன்றும் தொடர்­கி­றது. 
 
Q: அர­சியல் பரம்­பரை என்று குறிப்­பிட்­டீர்கள் அது­பற்றி….?
பதில்: எனது தந்தை லங்கா சம­ச­மாஜ கட்சி அர­சி­யல்­வாதி, எனது மூத்த சகோ­தரன் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி மத்­து­கம பிர­தேச சபை தலைவர். அன்­றி­ருந்த அனில் முன­சிங்க போன்ற அர­சியல் தலை­வர்­களின் ஏமாற்றும் நட­வ­டிக்­கை­களால் விரக்­தி­யுற்று நான் ஐ.தே.கட்­சியின் பக்கம் சாய்ந்து கொண்டேன்.

2002இல் நடை­பெற்ற பிர­தேச சபைத் தேர்­தலில் நானும் எனது அண்­ணனும் எதிரும் புதி­ரு­மான கட்­சி­களில் போட்­டி­யிட்டு நான் தலை­வ­னானேன். அண்ணன் எதி­ரணி தலை­வ­ரானார்.

அப்­போதும் சிறு­பான்மை மக்­க­ளுக்கு இயன்ற சேவை­களைச் செய்து கொடுத்தேன். 
 
Q: உங்கள் அர­சியல் படி­முறை எவ்­வாறு அமைந்­தது?
பதில்: 2004ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்­தலில் 34 ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்ட விருப்பு வாக்­கு­களைப் பெற்று, இரண்டாம் இடத்­திற்கு தெரி­வானேன். 

2006ஆம் ஆண்டு பிர­தேச சபைத் தேர்­தலில் ஐ.தே.கட்­சியில் யாரும் முன்­வ­ராத நிலையில் மாகாண சபையை புறம் தள்­ளி­விட்டு தேர்­தலில் குதித்துப் பன்னிரண்டு ஆயிரம் விருப்பு வாக்­கு­களைப் பெற்று அகில இலங்­கை­யிலும் இரண்டாம் இடம் பெற்றேன்.

பின்னர் சத்­தியப் பிர­மாணம் செய்­யாது மீண்டும் மாகாண சபை பிர­தி­நி­தி­யா­கவே இருந்தேன். 
2009 ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்­த­லிலும் வெற்றி பெற்றேன்.
 
Q: நீங்கள் சிறை­யி­லி­ருந்து வெற்றி பெற்­ற­தாகக் கேள்­விப்­பட்­டி­ருக்­கிறேன்….?
பதில்: அது 2010ஆம் ஆண்டு பாரா­ளு­மன்றத் தேர்­தலில் தான். மஹிந்­தவின் அரா­ஜ­கத்தில் நிகழ்ந்த அந்த சம்­பவம் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­தவின் அரா­ஜ­கத்தில் அவரின் அடி வரு­டி­களால் குண்டு வைக்­கப்­பட்டு அப்­பழி என்­மீது சுமத்­தப்­பட்டு 400 நாட்கள் சிறை­வா­ச­மி­ருந்தேன்.

2010ஆம் ஆண்டு பாரா­ளு­மன்றத் தேர்­த­லிலும் சிறையில் இருந்­த­வாறே போட்­டி­யிட்டு 51 ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்ட விருப்பு வாக்­குகள் பெற்று மாவட்­டத்தில் முத­லா­வ­தாக தெரி­வானேன்.

எனது சேவை, நேர்­மை­க­ளாலே இந்­த­ளவு மக்கள் ஆத­ரவு எனக்குக் கிடைத்­தது. 
 
Q: நீங்கள் தோட்­டப்­ப­குதி மக்­களை அர­வ­ணைத்துச் செல்­வது வாக்குப் பிச்­சைக்­கா­கவா? 
பதில்: அப்­படி எடை­போ­டு­வது தவறு தோட்டத் தொழி­லா­ளி­களே இந்­நாட்டு பொரு­ளா­தா­ரத்தின் முது­கெ­லும்­பு­க­ளா­வார்கள். இதற்­காக அவர்­க­ளுடன் இருக்­கிறேன்.
 
Q: நீங்கள் தோட்ட மக்கள் விட­யத்தில் எவ்­வாறு உதவி வந்­தி­ருக்­கி­றீர்கள்.?
பதில்: கடந்த ஒரு வரு­டத்­திற்கு முன்னர் இப்­ப­குதி காளி கோயிலில் வழ­மை­யாக நடத்­தி­வரும் திரு விழாவை பொது­பல சேனா தடுக்க முன்­வந்­தது. பொலி­ஸாரும்  இதற்கு துணை நின்­றனர்.

இவ்­வி­ட­யத்தில் நான் முன்­வந்து வின­விய போது இந்­தி­யாவின் தம்ப திவயில் பிக்­குமார் உட்­பட எமது சிங்­கள மக்கள் தாக்­கப்­பட்­ட­தற்கு பழி வாங்­கவே இவ்­வாறு தடுக்­கிறோம் என காரணம் தெரி­வித்­தனர்.

இக்­க­ருத்­தினை ஏற்­காது நான் தோட்ட தமிழர் பக்கம் நின்று வாதா­டினேன்.

அப்­போது எஸ்.எஸ்.பி.யாக இருந்த ரொஷான் சில்வா, திரு விழா இடம்­பெ­று­மாயின் இம்­ம­க்களை சவப் பெட்­டி­யிலே தான் எடுத்துச் செல்வேன் என இன­வாதம் கக்­கினார்.

அத்­துடன் நீதி மன்ற தடை உத்­த­ர­வையும் எடுத்து வந்து, கண்ணீர்ப் புகை குண்­டுகள், நீர் பீச்சும் வண்­டிகள் என்று பீதிப் பூச்­சாண்டி காட்­டினர். 

நான் விட்டுக் கொடுக்­க­வில்லை. களுத்­துறை – மத்­து­க­ம­வீ­தியில் சத்­தியாக் கிர­கத்தில் ஈடு­பட்டேன். நீதி மன்ற தடை உத்­த­ரவுப் பத்­தி­ரத்­தையும் கிழித்­தெ­றிந்து போரா­டினேன். அதன் விளைவு.

நீதி நிலை நாட்­டப்­பட்­டது. திரு­விழா நடத்தும் வாய்ப்பும் கிடைத்­தது.

எனது, நட­வ­டிக்­கையால் பேரி­னத்­த­வர்கள் தம் பக்கம் இருக்­கி­றார்கள் என்ற உணர்வில் தமிழ் மக்­க­ளது இன­வாத எண்­ணமும் தணித்­தது. 
 
Q: பிரச்­சி­னைகள், அவ­லங்கள் குறித்து அடுக்கிக் கொண்டே போகி­றீர்கள். எப்­போது விடிவு கிடைப்­பது? 
பதில்: கடந்த காலங்­களில் என்­னா­லான பணி­களைச் செய்த நான் இனி மலரப் போவது ஐ.தே.க. அர­சுதான். இதில் தோட்ட மக்கள் உட்­பட சிறு­பான்மை இன மக்­களின் தேவைகள் உரி­மை­களை நான் மனி­தா­பி­மான அடிப்­ப­டையில் பெற்றுக் கொடுக்க முன்­நின்று உழைப்பேன். இது எனது உடன் பிறந்த குண­மாகும். 
 
Q: நீங்கள் தமிழ் மக்­களின் விட­யத்தைப் போன்று, முஸ்­லிம்கள் பக்கம் நின்று உழைப்­ப­து கடந்த அளுத்­கம அசம்­பா­வி­தத்தின் போது வெளிச்­சத்­துக்கு வந்­தது. இது குறித்து…?
பதில்: மஹிந்த தனது அதி­கா­ரத்தை தக்­க­வைத்துக் கொள்ள, இன­வாத அமைப்­புக்­களைத் தட்டிக் கொடுத்து, சிறு­பான்மை இனங்­களை அடக்கி ஒடுக்­கவே எத்­த­னித்துக் கொண்­டி­ருந்தார்.

இதனால் அவ்­வப்­போது பல இடங்­களில் இன வன்­மு­றைகள் வெடித்­தன. அவற்றில் ஒன்­றா­கவே அளுத்­கம, தர்ஹா நகர், பேரு­வளை உள்­ளிட்ட இப்­பி­ராந்­திய முஸ்லிம் பிர­தே­சங்­களில் பேரி­ன­வா­தி­களின் காட்டு தர்பார் அரங்­கே­றி­யது. 

வன்­செ­யல்கள் இடம்­பெற்றுக் கொண்­டி­ருக்கும் போதே எனது ஆத்ம நண்பர் இப்­திகார் ஜெமீல் என்­னுடன் தொடர்பு கொண்டு முறை­யிட்டார். அப்­போது எனது வாகனம் பழு­தான நிலையில் மோட்டார் சைக்கிள் மூலம் விரைந்து வந்தேன்.

அரசு கண்டு கொள்­ளாத நிலையில் இருந்தும் பொலிஸார் பார்த்­தி­ருக்­கையில், சில சமயம் பாது­காப்பு தரப்பின் பங்­க­ளிப்­போடு அடா­வ­டித்­த­னங்கள் நடந்து கொண்­டி­ருந்­தன. 

மத்­து­கம கட்­டு­கா­கெ­லி­யவில் ஆசி­யாவின் மிகப் பெரிய ஆட்­டுப்­பண்ணை பற்றி எரிந்து கொண்­டி­ருந்­தது. ஆற­றிவு காட்டு மிராண்­டி­களின் காட்டு தர்­பாரால் ஐய­றிவு அப்­பாவி ஆடுகள் கதறிக் கொண்­டி­ருந்­தன.

இக் கொடூ­ரத்தை தடுத்து நிறுத்­து­வதில் களத்தில் இறங்கி செயற்­பட்டேன். இதனால் எனது கண் ஒன்றும் பாதிக்­கப்­பட்­டது. 

எனது இன, மத­வா­த­மற்ற பங்­க­ளிப்பு குறித்து அமெ­ரிக்க தூத­ரகம் என்னை அழைத்து, சிறு­பான்­மை­யி­னரை இம்சை செய்யும் மிலேச்­சர்கள் உள்ள நாடு இலங்கை என்ற அவப்­பெயர் சர்­வ­தேச மட்­டத்தில் நிலவி வந்த நேரத்தில் என்­னாலே அப்­பெயர் அகற்­றப்­பட்­டது என்று என்னைப் போற்­றினர்.

அவப்­பெயர் முத்­தி­ரையை அகற்­றிய உங்­க­ளுக்கு அரசால் ஏதும் அச்­சு­றுத்­தல்கள் வந்தால் அமெ­ரிக்கா என்றும் உங்­க­ளு­டனே இருக்கும் என்ற துணி­வையும் தந்­தார்கள்.
 
Q: இதற்குப் புறம்­பா­கவும் முஸ்­லிம்­க­ளுக்கு உத­வி­யி­ருக்­கி­றீர்­களா?
பதில்: அக­ல­வத்த தொகு­தியில் முஸ்­லிம்கள் செறிந்து வாழும் ஊர் பலாந்­தை­யாகும். இங்கு கடந்த ஹஜ்ஜின் போது முஸ்­லிம்கள் குர்பான் மாட்­டி­றைச்சி விநி­யோ­கித்துக் கொண்­டி­ருந்த போது, பது­ரெ­லிய பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி உதய குமார், சுமார் 1000 கிலோ இறைச்­சியைக் கைப்­பற்றி அட்­ட­காசம் புரிந்தார்.

இத்­த­க­வலும் இப்­திகார் ஜெமீல் மூலம் எனக்குக் கிடைத்தும், உடன் செயலில் இறங்கி, சம்­பந்­தப்­பட்ட பொலிஸ் அதி­கா­ரியை மத்­து­கம நீதி­மன்ற எதிர்­கூட்டில் ஏற்­றினோம்.

இதே­போன்று பது­தெ­ர­லிய வைத்­தி­ய­சாலை சிறு­பி­ரச்­சினை கார­ண­மாக 7 தினங்கள் மூடப்­பட்­டி­ருந்த நிலையில் அரசு திறக்க தயங்கிய நிலையில், 72 மணி நேரமாகும் வரை உண்ணா விரதப் போராட்டம் இருந்து.

வைத்தியசாலைத் தொழிற்சங்கத்தினரை முழுங்காலில் நின்று மண்டியிடச் செய்து திறந்து வைத்தேன். இதன் பின்னணியில் நான் சிறை செல்லவும் நேர்ந்தது. 
 
Q: தேர்தல் வெற்றி குறித்து நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?
பதில்: ஜனாதிபதித் தேர்தலின் போது சகல அதிகாரங்களையும் வைத்துக் கொண்டு தனிக்காட்டு ராஜாவாக தன்னை யாராலும் விழ்த்த முடியாத ஜாம்பவானாக நினைத்துக் கொண்டிருந்த மஹிந்தவை மண் கவ்வச் செய்த மக்களுக்கு இந்த பாராளுமன்றத் தேர்தலில் மஹிந்தவையும் அவர் கட்சியையும் வீழ்த்துவது சுலபம். வெற்றியை மக்கள் இப்போதே தீர்மானித்தும் விட்டார்கள்.

Related

இலங்கை 5776848397987861262

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item