புதிய வருடத்தில் நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றோம்: இரா.சம்பந்தன்

புதிய வருடத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இனப்பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...


புதிய வருடத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இனப்பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போது ஆட்சி மிக மோசமடைந்துள்ளது. எனவே, இந்த நிலைமையில் கட்டாயம் ஒரு மாற்றம் ஏற்படவேண்டும். இது இந்த நாட்டில் வாழும் மூவின மக்களின் விருப்பமாக உள்ளது. குறிப்பாக, தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை நீண்டகாலமாகத் தொடர்கின்றது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது. எனவே, தமிழரின் பிரச்சினைக்கு 2015 இல் கெளரவமான - நிரந்தரமான தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் மக்களும் நாமும் இருக்கின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் அனைத்து மக்களும் ஆட்சி மாற்றத்திற்கு ஏற்றவகையில் தமது வாக்குகளைப் பயன்படுத்தவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related

இலங்கை 8778907744600420638

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item