பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விநியோகித்த நபர் கைது
பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விநியோகித்த ஒருவர் கண்டி கெழும்பு வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து போதைமரு...


பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விநியோகித்த ஒருவர் கண்டி கெழும்பு வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து போதைமருந்து வில்லைகள் அடங்கிய 09 பக்கெற்றுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பதென்ன பகுதியை சேர்ந்த 63 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
தனியார் மருந்தகம் ஒன்றில் பயிற்சி பெறாது தொழில் புரிந்த ஒருவரே இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
போதை வில்லைகள் அடங்கிய ஒரு பக்கற்றை 100 ரூபாவிற்கு விற்பனை செய்துவந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை கண்டி நீதவான் முன்னிலையில் இன்று (19) ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.