மாத்தறையில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழப்பு
மாத்தறை, வெலிகம – மிதிகம பகுதியில் நேற்று (07) இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். இராணுவத்தினரின் வாகனமொன்றும் முச்சக்கர...

http://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_314.html

இராணுவத்தினரின் வாகனமொன்றும் முச்சக்கர வண்டியும் மோதி விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் உயிரிழந்த மூவரில், முச்சக்கர வண்டியில் பயணித்த குழந்தையொன்றும் மூன்றரை வயதான பிள்ளையொன்றும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.
மேலும், விபத்தில் காயமடைந்த 13 வயதான பெண் பிள்ளை மற்றும் இரு பெண்கள் வலான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
மிதிகம பகுதியை சேர்ந்தவர்களே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
விபத்துக்குள்ளான இராணு வாகனம் கைப்பற்றப்பட்டதுடன், அதன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.