ராணுவ ஆவணங்களை ஐ.எஸ் தீவிரவாதிகள் திருடிவிட்டனரா?
ஐ.எஸ் தீவிரவாதிகள் பிரான்ஸ் நாட்டு ராணுவ ஆவணங்களை திருடி பேஸ்புக் தளத்தில் வெளியிட்டதாக கிளம்பிய சர்ச்சைக்கு பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம் அ...

http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_973.html

ஐ.எஸ் தீவிரவாதிகள் பிரான்ஸ் நாட்டு ராணுவ ஆவணங்களை திருடி பேஸ்புக் தளத்தில் வெளியிட்டதாக கிளம்பிய சர்ச்சைக்கு பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
ஐ.எஸ் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் பிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற TV5Monde தொலைக்காட்சி நிறுவனத்தை கடந்த புதன்கிழமை ’ஹேக்’ (Hack) செய்து தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததாக கூறப்படுகிறது.
TV5Monde நிறுவனத்தை சேர்ந்த 11 ஒளிப்பரப்பு சேனல்களை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த தீவிரவாதிகள், அவற்றின் ஒட்டுமொத்த நிகழ்ச்சிகளையும் முடக்கினர்.
புதன்கிழமை மாலை முதல் வியாழக்கிழமை மாலை வரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் முடக்கப்பட்டதால், தொலைக்காட்சி நிறுவனம் தனது முந்திய நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்பி வந்துள்ளது.
இதனை தொடர்ந்து, செய்தி நிறுவனத்திற்கு சொந்தமான இணையதளம் மற்றும் பேஸ்புக் தளத்தில், தனது அமைப்பிற்கு எதிராக போர் தொடுத்து வரும் பிரான்ஸ் நாட்டு ராணுவ அதிகாரிகளின் ஆவணங்களை ஐ.எஸ் தீவிரவாதிகள் வெளியிட்டதாக கூறப்படுகிறது.
பலத்த சர்ச்சையை கிளப்பிய இந்த விவகாரம் தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சகம், தொலைக்காட்சி இணையதளங்களில் வெளியிடப்பட்ட ஆவணங்கள் ஒன்று கூட ராணுவ வீரர்களுக்கு சொந்தமான ஆவணங்கள் இல்லை.
பிரான்ஸின் ராணுவ ஆவணங்களை ஐ.எஸ் தீவிரவாதிகள் திருடிவிட்டதாக கூறுவதில் உண்மை இல்லை என்று தீவிரமான ஆய்வுகளுக்கு பிறகு விளக்கம் அளித்துள்ளது.
தொலைக்காட்சி நிறுவனத்தை ஐ.எஸ் தீவிரவாதிகள் முடக்கியது தொடர்பாக குறிப்பிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சகம், இது பிரான்ஸ் ஊடகத்துறை மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் என்றும், மற்ற ஊடகங்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
மேலும், தொலைக்காட்சி இணையதளங்களில் செய்தி வெளியிட்டுள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள், அமெரிக்காவுடன் இணைந்து தனது அமைப்பிற்கு எதிராக போர் தொடுத்து வருவதின் மூலம் பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹோலன்டே ஒரு மன்னிக்க முடியாத தவறை செய்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்