ஆற்றங்கரையில் 6 மாணவர்களும் 3 மாணவிகளும் போதையில்; நாவலப்பிட்டியில் சம்பவம்
ஆற்றங்கரையில் போதையில் இருந்த 6 மாணவர்களையும் அவர்களுடனிருந்த 3 மாணவிகளையும் நாவலப்பிட்டி பொலிஸார் நேற்று வியாழக்கிழமை மாலை கைது செய்த...


அட்டனிலுள்ள பிரபல பாடசாலைகளைச் சேர்ந்த இம்மாணவர்கள் கினிகத்தேனை பகுதியில் மகாவலிகங்கை ஆற்றங்கரையில் போதையில் இருப்பதாக பொதுமக்களினால் வழங்கப்பட்ட தகவலையடுத்து அங்கு சென்ற நாவலப்பிட்டி பொலிஸார் அவர்களைக் கைதுசெய்து பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
உயர்தரத்தில் கல்வி கற்கும் இவர்கள் அனைவரும் பத்தொன்பது வயதுடையவர்கள். இவர்கள் மகாவலிகங்கை கரையோரத்தில் ஆள் நடமாட்டமற்ற பகத்துங்குவ பகுதிக்கு காலை வேளையிலேயே வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலதிக வகுப்புக்குச் செல்வதாக வீடுகளில் கூறியே வந்துள்ளனர்.
ஆறு மாணவர்களும் ஒரே பாடசாலையைச் சேர்ந்தவர்கள் எனவும் அதேபோன்று மாணவிகள் மூவரும் ஒரே பாடசாலையைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
இவர்களது பெற்றோர்களை அழைத்து அவர்களுக்கும் மாணவர்களுக்கும் அறிவுரை வழிகாட்டல்களை வழங்கி வியாழன் இரவு 8 மணியளவில் இவர்களைப் பெற்றோரிடம் பொலிஸார் ஒப்படைத்துள்ளனர்.