நடந்தது கற்பழிப்பு அல்ல: அரசின் அறிக்கையால் நாகாலாந்து சம்பவத்தில் திடீர் திருப்பம்
நாகாலாந்து மாநிலத்தில் பொது மக்களால் சாலையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சரிப் கான் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. நாகாலாந்தில...

http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_452.html
நாகாலாந்து மாநிலத்தில் பொது மக்களால் சாலையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சரிப் கான் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. நாகாலாந்தில் உள்ள திமாப்பூர் சிறையில் கற்பழிப்பு புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டிருந்த சரிப் கானை, பொது மக்கள் கடந்த 5ம் திகதி சாலையில் இழுத்து சென்று அடித்துக்கொன்றனர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு நாகாலாந்து மாநில அரசு ஓர் அறிக்கை அனுப்பி வைத்துள்ளது. அந்த அறிக்கையில், சையது சரிப் கான் பொலிசில் அளித்த வாக்குமூலத்தை தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வாக்குமூலத்தில், சம்பந்தப்பட்ட பெண்ணை அவரது விருப்பத்துடன் இரண்டு தடவை அழைத்துச் சென்று பாலியல் உறவில் ஈடுபட்டதாகவும், அதற்காக ரூ.5 ஆயிரம் கொடுத்ததாகவும் சரிப் கான் கூறியுள்ளார். ஆனால், அப்பெண் கூடுதலாக பணம் கேட்டபோது தான் தர மறுத்ததால், கற்பழிப்பு புகார் கொடுத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அந்த அறிக்கையில், இது பலாத்காரம் போல் தெரியவில்லை என்றும், இருவரின் விருப்பத்துடன் நடந்த பாலியல் உறவு என்று தோன்றுவதாகவும் கூறப்பட்டுள்ளது. |
![]() |