மத்திய மாகாண சபைக்கு புதிய முதலமைச்சர்?
மத்திய மாகாண முதலமைச்சராக திலின பண்டார தென்னக்கோனை நியமிக்குமாறு கோரி மாகாண சபையின் 30 ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் ஆளுநரிடம் ச...


சத்திய கடதாசி வழங்கிய உறுப்பினர்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 15 உறுப்பினர்களும் அடங்குவதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் திலின பண்டார தென்னக்கோன் தெரிவித்தார்.
சத்திய கடதாசிகளை கையளிக்கும்போது மத்திய மாகாண எதிர்கட்சித் தலைவர் வசந்த அலுவிஹாரேயும் பிரசன்னமாகியிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய மாகாண சபையில் மொத்தமாக 58 உறுப்பினர்கள் உள்ளதுடன் மாகாண முதலமைச்சராக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர் சரத் ஏக்கநாயக்க பதவி வகித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்
எவ்வாறாயினும் இந்த விடயம் குறித்து ஆராய்ந்து தீர்மானமொன்றை மேற்கொள்வதாக மத்திய மாகாண ஆளுநர் சுரங்கனி எல்லாவெல தெரிவிக்கின்றார்.