அமெரிக்க நாடாளுமன்றத்தில் இஸ்ரேல் பிரதமர் உரை!
ஈரான் அணுசக்தி விவகாரம் தொடர்பாக அண்மையில் ராய்ட்டர்ஸ் ஊடகத்துக்கு அமெரிக்க அதிபர் அளித்த செய்தியில், முறையான அளவீடுகளுடன் ஈரானின் அணுசக்தி...


ஈரான் அணுசக்தி விவகாரம் தொடர்பாக அண்மையில் ராய்ட்டர்ஸ் ஊடகத்துக்கு அமெரிக்க அதிபர் அளித்த செய்தியில், முறையான அளவீடுகளுடன் ஈரானின் அணுசக்தி நடவடிக்கைகளைக் குறைந்தது 10 வருடங்களுக்கு முடக்குவது என்ற ஒப்பந்தமானது எந்தவொரு இராணுவ நடவடிக்கைக்குப் பதிலாகவும் பொருளாதாரத் தடைகளுக்குப் பதிலாகவும் மிகுந்த பயன் அளிக்கக் கூடியது என்ற கருத்தைத் தெரிவித்திருந்தார்.
ஆனால் ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவுக்கு விஜயம் செய்திருந்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு இன்று அமெரிக்கக் காங்கிரஸில் இஸ்ரேல் விவகாரம் தொடர்பாக ஆற்றிய உரை, ஒபாமாவின் இத்திட்டத்துடன் அவர் உடன்படாது கருத்து வேறுபாட்டைக் கொண்டிருப்பதை சுட்டிக் காட்டியுள்ளது. இது குறித்து நெதன்யாஹு அமெரிக்கக் காங்கிரஸில் எச்சரிக்கையில், ஈரானுக்கும் உலக சக்திகளுக்கும் இடையே மும்மொழியப் பட்டுள்ள ஒப்பந்தமானது ஒரு மோசமான ஒப்பந்தம் எனவும் இது அணுவாயுதங்களை ஈரான் பெறுவதைத் தடுக்க முடியாது என்றும் பதிலாக இன்னும் அதிகமாக அவற்றைப் பெருக்கி யூதர்களின் நாடான இஸ்ரேலை மரணக் கிடங்கில் தள்ளி விடக் கூடியது என்று சாடினார்.
கனவே ஈரானுடன் அதிபர் ஒபாமா திட்டமிட்டிருந்த ஒப்பந்தம் பாராளுமன்றத்தில் பரிசீலிக்கப் பட்டு அதனை 60 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப் பட வேண்டும் என்ற சட்ட மசோதா அமெரிக்கப் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டுள்ளது. இதனை அதிபர் ஒபாமா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி ரத்து செய்யும் திட்டத்தில் உள்ளார் என்றும் செய்திகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் ஈரான் அணுவாயுத விவகாரம் தொடர்பில் இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே முரண்பாடு இருப்பதை ஒபாமாவும் ஒத்துக் கொண்டுள்ளார் என்ற போதும் இது இவ்விரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவை நிரந்தரமாகப் பாதிக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை இன்று செவ்வாய்க்கிழமை ஈரான் விவகாரம் தொடர்பில் அமெரிக்கக் காங்கிரஸில் சுமார் 39 நிமிடம் உரையாற்றிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹு உம் அதிபர் ஒபாமவை மரியாதைக் குறைவாகத் தான் எதுவும் பேசவில்லை என்றும் இப்பிரச்சினைக்கு மத்தியிலும் அமெரிக்க இஸ்ரேல் உறவானது மிக உறுதியாகத் தொடர்ந்து நீடிக்கும் என்று கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.