இந்தோனேஷியாவில் மரணத்திற்காக காத்திருக்கும் தமிழன்
இந்தோனேசியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அவுஸ்திரேலிய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இரண்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. ...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_67.html

இந்தோனேசியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அவுஸ்திரேலிய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இரண்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.
சிறிலங்காவை பூர்வீகமாகவும், அவுஸ்திரேலியாவை வாழ்விடமாகவும் கொண்ட தமிழரான மயூரன் சுகுமாரன் மற்றும் அன்ட்ரூ சானும் மரணதண்டனை நிறைவேற்றப்படவுள்ள சிறைச்சாலைத் தீவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.
இவர்கள் இருவரும் பாலி தீவின் கெரோபொக்கான் சிறைச்சாலையில் இருந்து இன்று அதிகாலைக்கு முன்னதாக பொலிஸ் கவச வாகனத்தின் மூலம் வெளியேற்றப்பட்டிருந்தனர்.
பாலியின் டென்பஸார் விமான நிலையத்தில் வாடகைக்கு அமர்த்தப்பட்ட விமானத்திற்குள் 33 வயதுடைய மயூரனும், 31 வயதுடைய சானும் தள்ளப்பட்டதைக்
காட்டும் புகைப்படங்களை அவுஸ்திரேலிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.இவர்கள் இருவரும் ஜாவாவில் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு சிலாகெப் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து படகு மூலம் நுசக்கம்பங்கன் சிறைச்சாலைக்கு படகு மூலம் கொண்டு செல்லப்பட்டார்கள். இந்தத் தீவில் துப்பாக்கிக் குழுக்களால் சுட்டுக் கொல்லபடுவதன் மூலம் அவர்கள் மீதான மரணதண்டனை நிறைவேற்றப்படும்.
மரணதண்டனை நிறைவேற்றப்படும் தினம் பற்றி இன்னமும் அறிவிக்கப்படவில்லை. எனினும், இந்தோனேஷிய சட்ட மா அதிபர் 72 மணித்தியாலங்களுக்கு முன்னதாக அது பற்றிய அறிவித்தலை விடுக்க வேண்டிய தேவை உள்ளது.
நுசக்கம்பங்கன் தீவில் மரணதண்டனை நிறைவேற்றப்படவுள்ள 11 கைதிகளுள் மயூரன், சான் ஆகியோரும் அடங்குகிறார்கள்.
இன்று காலை இருவரும் பாலி சிறைச்சாலையில் இருந்து வெளியேற்றப்படுவதற்கு சில நிமிடங்கள் முன்னதாக சானின் சகோதரர் மைக்கல் சிறைச்சாலைக்குள் பிரவேசிக்க முனைந்தார். எனினும், அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டடுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2005ஆம் ஆண்டில் இந்தோனேசியாவிலிருந்து ஹெராயினை கடந்த முயன்றதாக சான் மற்றும் சுகுமாரன் மீது குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. அவர்கள் சிறையில் இருந்த காலகட்டத்தில் திருந்தி விட்டதாக இவர்களது உறவினர்கள் கூறுகின்றனர்.
இவர்களைக் காப்பாற்ற தொடர்ந்து சட்ட ரீதியாகப் போராடி வருவதாக இவர்களது வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், இவர்களது கருணை மனுக்களை இந்தோனேஷிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ நிராகரித்து விட்ட நிலையில், அவர்களுக்கு மேலதிகமாக சட்ட ரீதியான வாய்ப்புகள் ஏதும் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.


Sri Lanka Rupee Exchange Rate