முழு நாட்டையும் சாப்பிட்டு விட்டு தற்போது குருணாகலையும் சாப்பிட வந்து விட்டார் என மகிந்த ராஜபக்ச !!
முழு நாட்டையும் சாப்பிட்டு விட்டு தற்போது குருணாகலையும் சாப்பிட வந்து விட்டார் என மகிந்த ராஜபக்ச குருணாகலில் தேர்தலில் போட்டியிடுவது குற...


முழு நாட்டையும் சாப்பிட்டு விட்டு தற்போது குருணாகலையும் சாப்பிட வந்து விட்டார் என மகிந்த ராஜபக்ச குருணாகலில் தேர்தலில் போட்டியிடுவது குறித்து வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
தேசிய ரூபவாஹினியில் இடம்பெற்ற அரசியல் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த நேரத்தில், நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் குழுவிடம் தயாசிறி இதனை கூறியுள்ளார்.
மிகவும் வெறுப்படைந்தவராக பேசிய தயாசிறி ஜயசேகர, “ முழு நாட்டையும் சாப்பிட்டு ஏப்பம் விட்டு, தற்போது குருணாகலையும் சாப்பிட வந்துள்ளனர். தேர்தல் முடியும் வரை மட்டுமே நாங்கள் இவர்களுடன் இருப்போம். என்ன செய்வது” என தயாசிறி குறிப்பிட்டுள்ளார்.
எது எப்படியிருந்த போதிலும் மகிந்த ராஜபக்ச தேர்தலில் குருணாகலில் போட்டியிட தீர்மானித்ததை அடுத்து, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருணாகல் அணியில் உட்பிரச்சினைகள் மேலும் அதிகரித்தன.
இதனையடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் எஸ்.பி. நாவின்ன ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டார். இதனால், மேலும் அதிருப்திக்கு உள்ளான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்தவர்கள் நாவின்னவுக்கு ஆதரவு தெரிவித்து அவருடன் இணைந்துள்ளனர். நாவின்னவுடன் சென்றுள்ள ஆதரவாளர்கள் எண்ணியதை விட மிகப் பெரிய எண்ணிக்கை என கூறப்படுகிறது.