அமெரிக்காவுக்கு எதிராக சீனா! மஹிந்தவை ஆட்சிப் பீடம் ஏற்ற கடும் பிரயத்தனம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினை மீண்டும் ஆட்சி பீடத்தில் ஏற்ற சீனா கடும் பிரயத்தனம் செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சீனத் தூதரக...

http://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_953.html
சீனத் தூதரகத்தின் இரண்டாம் அதிகாரியான அரசியல் பிரிவு பொறுப்பாளர் ரென் பகியான் இந்த நடவடிக்கைகளின் இணைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றார்.
இவர், ஜனாதிபதி மைத்திரி உள்ளிட்ட அரசாங்க முக்கியஸ்தர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மஹிந்தவின் தேர்தல் பிரச்சாரத்திற்காக சீன அரசாங்கம் நிதி உதவிகளை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அதனை வழங்குவதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் போலியான தகவல்களை இந்த தூதரக அதிகாரி வழங்கி வந்தமை அம்பலமாகியுள்ளது.
இந்த சீனத் தூதரக அதிகாரி, சிறிலங்கா அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுடன் தொடர்புகளைப் பேணி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சீன தூதரக உதவியுடன் மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தை விமர்சனம் செய்து, பத்திரிகைகள் அச்சிட்டு வெளியிடப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. மஹிந்த ராஜபக்சவுக்கு பிரபல ராஜ யோகம் உள்ளதாக தகவல் உள்ளடக்கப்பட்ட சோதிட செய்தித்தாள் மற்றும் பரபரப்புச் செய்தித்தாள்களும் இதில் அடங்குகின்றன.
கடந்த மஹிந்த ஆட்சிக் காலத்தில் சிறிலங்காவின் அபிவிருத்திப் பணிகளின் ஏகபோக உரிமையை சீனா கொண்டிருந்ததுடன், அதற்கான பெருமளவு தரகுப் பணம் ராஜபக்ஸ குடும்பத்திற்கு வழங்கப்பட்டிருந்தது.
எவ்வாறெனினும், சீனாவின் தலையீடு மறைமுகமாக மேற்கொள்ளுமாறு பணிக்கப்பட்ட போதிலும் இரண்டாம் அதிகாரி பகிரங்கமாக உதவிகளை வழங்கியதனால் சீனத் தூதுவர் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸக்களுடன் பேணி நெருங்கிய தொடர்பு காரணமாக குறித்த அதிகாரியின் சேவைக் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்தவின் ஆட்சியை நிறைவுக்கு கொண்டு வர, அமெரிக்கா பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்தது.
எதிர்க்கட்சியின் பொது வேட்பாளராக மைத்திரி நிறுத்தி அவரின் வெற்றியை உறுதி செய்ய அமெரிக்க முன்னின்று செயற்பட்டது. அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெரியின் தலைமையில் இந்த வேலைத்திட்டம் மு்ன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.