வசீம் தாஜூடீனின் மரணம் தொடர்பில் மகிந்த தரப்பினர் அச்சத்தில்!!
கொலை செய்யப்பட்டு உயிரிழந்த ரகர் வீரர் வசீம் தாஜூடீனின் புதைத்த சடலத்தை வெளியில் எடுத்து மீண்டும் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு நீதிமன்ற...

http://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_905.html
கொலை செய்யப்பட்டு உயிரிழந்த ரகர் வீரர் வசீம் தாஜூடீனின் புதைத்த சடலத்தை வெளியில் எடுத்து மீண்டும் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு நீதிமன்றில் உத்தரவிடப்பட்டதனை தொடர்ந்து மஹிந்த ராஜபக்ச மற்றும் தரப்பினர் மிகவும் அச்சத்துடன் இருப்பதாக தெரியவந்துள்ளது.
அதனை சுசில் பிரேமஜயந்தவினால் மேற்கொள்ளப்பட்ட அவசர செய்தியாளர் சந்திப்பின் மூலம் காணமுடிந்துள்ளது.
நீதிமன்ற வைத்திய பரிசோதனை நிறைவடைந்த பின்னர் புதைக்கப்பட்ட சடலத்தை மீண்டும் தோண்டி விசாரணை மேற்கொள்வதற்கு சட்ட ரீதியாக இடமில்லை என கூறியுள்ளார்.
தான் வழக்கறிஞராக பல வருட அனுபவம் கொண்டவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், குற்றவியல் ஏற்பாடுகள் சட்டமூல சரத்திற்கமைய சந்தேகத்திற்கிடமான மரணங்கள் தொடர்பில் சடலத்தை தோண்டி அது தொடர்பில் நீதிமன்ற வைத்திய பரிசோதனை மேற்கொள்வதற்கு சட்டத்தில் இடம் உண்டு என்பதனை அறியாத சுசில் பயத்தில் புலம்புவதாக தெரிவிக்கப்படுகின்றது.