எனக்கு பிள்ளைகள் இல்லை என்பது உண்மைதான்! ஆனால் போதைப் பொருள் கடத்தவில்லை: ரணில்
எனக்கு பிள்ளைகள் இல்லை என்பது உண்மைதான். ஆனால் நான் போதைப் பொருள் கடத்துவதில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்...

http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_587.html

எனக்கு பிள்ளைகள் இல்லை என்பது உண்மைதான். ஆனால் நான் போதைப் பொருள் கடத்துவதில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் டி.எம். ஜயரட்ன, ரணில் விக்ரமசிங்கவை தனிப்பட்ட வாழ்க்கையைத் தொடர்புபடுத்தி நாடாளுமன்றில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
பிள்ளைகள் இல்லாதவர் என டி.எம். ஜயரட்ன, பிரதமரை விமர்சனம் செய்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ச மட்டுமன்றி தற்போது எல்லோரும் கள்வர்கள். நாடாளுமன்றில் உள்ள அனைவரும் கள்வர்கள், கொலைகாரர்கள், கொள்ளையர்கள் என அடையாளப்படுத்தப்படுகின்றனர்.
இந்த குற்றச்சாட்டுக்கள் வரலாற்றுக்குச் செல்லும். சிறுவர்கள் இதைப் பற்றி என்ன நினைப்பார்கள். குற்றம் சுமத்தப்படுபவரின் பிள்ளைகளுக்கு எவ்வாறான உணர்வு ஏற்படும்.
பிரமருக்கு என்றால் பிரச்சினையில்லை. ஏனென்றால் அவருக்கு பிள்ளைகள் இல்லைதானே” என டி.எம். ஜயரட்ன குறிப்பிட்டுள்ளார்.
“முதலில் நான் சொல்ல வேண்டும். எனக்கு பிள்ளைகள் இல்லை. என்றாலும் நான் போதைப் பொருள் நாட்டுக்கு கொண்டு வரவில்லை. பிள்ளைகள் இருப்பவர்கள் போதைப் பொருளை கடத்துவது கொலைக் குற்றச் செயலை விடவும் பாரிய குற்றமாகும்.
அவ்வளவுதான் நான் சொல்வேன். வேறு எதனையும் சொல்ல விரும்பவில்லை” என பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதிலளித்துள்ளார்.