சுதந்திரக் கட்சி சார்பில், தேர்தலில் நிற்க 40 பேருக்கு தடை (விபரம் இணைப்பு)

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிராக செயற்பட்டு வரும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளத...


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிராக செயற்பட்டு வரும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் கூட்டு பொறுப்புக்கு எதிராக செயற்பட்டு கட்சியின் ஒழுக்க விதிகளை மீறி வரும், மகிந்த ராஜபக்ச ஆட்சியில் ஊழல், மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்படும் சுமார் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என தெரியவந்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலோ அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலோ இவர்களுக்கு வாய்ப்பை வழங்குவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

காமினி லொக்குகே, குமார் வெல்கம, பந்துல குணவர்தன, டளஸ் அழகபெரும, ஜீ.எல்.பீரிஸ், டி.பி.ஏக்கநாயக்க, எஸ்.எம்.சந்திரசேன, கெஹெலிய ரம்புக்வெல்ல, நாமல் ராஜபக்ச, சனி ரோஷன் கொடித்துவக்கு, ஸ்ரீயானி வேஜ்விக்ரம, நிஷாந்த முத்துஹெட்டிகம, சஜின் வாஸ் குணவர்தன, மொஹான் பீ.டி.சில்வா, சானுக வித்தானகமகே, அருந்திக்க பெர்னாண்டோ, சரத் வீரசேகர, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, மகிந்தானந்த அளுத்கமகே, சாலிந்த திஸாநாயக்க, சரத்குமார குணரட்ன, ரோஹித்த அபேகுணவர்தன, ரஞ்சித் டி சொய்சா, ஷாமிக்க புத்ததாச, எஸ்.சி. முத்துகுமாரன, ஜானக்க வக்கும்பர, வீ.கே. இந்திக, ரொஹான் ரணசிங்க, மனுஷ நாணயக்கார, உதித்த லொக்குபண்டார, கீதாஞ்சன குணவர்தன, வை.பி. பத்மசிறி, லக்ஷ்மன் வசந்த பெரேரா, விமல் வீரவன்ஸ, வீரகுமார திஸாநாயக்க, தினேஷ் குணவர்தன, வாசுதேவ நாணயக்கார, மகிந்த யாப்பா அபேவர்தன ஆகியோருக்கே தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்காது என மிகவும் நம்பகமான வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக விரைவில் வழக்கு

இவர்களில் பாரதூரமான நிதி மோசடி மற்றும் முறைகேடுகள் சம்பந்தமான குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான ரோஹித்த அபேகுணவர்தன, மகிந்தானந்த அளுத்கமகே, குமார வெல்கம, டலஸ் அழகபெரும, பந்துல குணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, எஸ்.எம்.சந்திரசேன, கெஹெலிய ரம்புக்வெல்ல, சாலிந்த திஸாநாயக்க, சரத் வீரசேகர ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் குறித்து துரிதமான விசாரணைகளை நடத்தி அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது.

இதனை தவிர மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் நாமல் ராஜபக்சவுடன் இணைந்து நீலப்படை என்ற அமைப்பை நடாத்தி அதன் ஊடாக மேற்கொண்டதாக கூறப்படும் பல்வேறு குற்றங்கள், பாலியல் வன்முறைகள், கப்பம் பெறுதல், பொது சொத்துக்களை கொள்ளையிட்டமை, போன்ற பல சம்பவங்கள் தொடர்பில் உதித்த லொக்குபண்டார, மனுஷ நாணயக்கார, நாமல் ராஜபக்ச, ஷானுக வித்தானகமகே ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக தற்போது விரிவான விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதுடன் அவர்களுக்கு எதிராகவும் துரிதமாக வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில், தியத்தலாவ பிரதேசத்தில் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருக்கும் ஆடை உற்பத்தி தொழிற்சாலை ஒன்றை நீலப்படையணியின் வன்முறையாளர்களை பயன்படுத்தி பலவந்தமாக கைப்பற்றியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கிடைத்துள்ள முறைப்பாடு குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான தனியார் துறை வர்த்தகருக்கு சொந்தமான இந்த சொத்தை, சப்ரகமுவ மாகாண முன்னாள் ஆளுநர் வி.ஜே.எம் லொக்குபண்டாரவின் மகனான நாடாளுமன்ற உறுப்பினர் உதித்த லொக்குபண்டாரவே கொள்ளையிட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் உதித்த லொக்குபண்டாரவின் வன்முறை செயல் மற்றும் நீலப்படையணிக்கு எதிராக பண்டாரவளை மாவட்ட நீதிமன்றத்தில் தற்போது வழக்கொன்று நடைபெற்று வருகிறது.

Related

இலங்கை 1907648283898806218

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item