பெண்ணை பலாத்காரம் செய்தாரா பிள்ளையான்..?? அதிர்ச்சித் தகவல்கள்

கிழக்கு மாகாணசபையில் குறித்த ஒரு அமைச்சில் பணியாற்றிய பெண் உத்தியோகத்தர் ஒருவர் பிள்ளையானால் பல தடவைகள் அச்சுறுத்தி கற்பழிக்கப்பட்டதாக தகவல்...

downloadகிழக்கு மாகாணசபையில் குறித்த ஒரு அமைச்சில் பணியாற்றிய பெண் உத்தியோகத்தர் ஒருவர் பிள்ளையானால் பல தடவைகள் அச்சுறுத்தி கற்பழிக்கப்பட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன. குறித்த பெண் உத்தியோகத்தரின் சகோதரன் 2007ம் ஆண்டு கொழும்பு செல்லும் வழியில் காணாமல் போயுள்ளார்.

இது தொடர்பாக பெண் உத்தியோகத்தரும் அவரது குடும்பமும் பல இடங்களுக்கும் சென்றும் காணாமல் போனவரின் தகவல்களை அறியமுடியவில்லை. இந் நேரத்தில், வடக்கு கிழக்கு மாகாணசபை பிரிக்கப்பட்ட பின்னர் கிழக்கு மாகாணசபைக்கு இடம் பெற்ற தோ்தலில் பிள்ளையான் முதலமைச்சராக வந்தார். அதன் பின்னர் குறித்த பெண் உத்தியோகத்தரும் தனக்கு தெரிந்த ஒரு சிற்றுாழியர் ஊடாக பிள்ளையானை நேரடியாகச் சந்தித்து தனது காணாமல் போன சகோதரன் தொடர்பாக முறையிட்டுள்ளார்.

குறித்த பெண் உத்தியோகத்தரது அழகில் மயங்கிய பிள்ளையான் அவ் உத்தியோகத்தரது முறைப்பாட்டை கருத்தில் எடுப்பதாகத் தெரிவித்து இது தொடர்பாக தான் கொழும்பு செல்லும் போது அங்கு வந்து தன்னைச் சந்திக்கும் படி தெரிவித்துள்ளார்.

இதனை நம்பி பிள்ளையானைச் சந்திப்பதற்காக சென்ற பெண் உத்தியோகத்தரை, முக்கிய அதிகாரியை சந்திப்பதற்காக என கூறி பிரபல ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்துச் சென்று அங்கு வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகத் தெரியவருகின்றது. இது தொடா்பாக தகவல்கள் வெளியாகினால் சகோதரன் கொலை செய்யப்படுவான் என எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

இதன் பின்னர் குறித்த பெண் அலுவலரைப் பலதடவைகள் அச்சுறுத்தி அழைத்து பிள்ளையால் பாலியல்வல்லுறவுக்கு உள்ளாக்கியுள்ளது தெரியவந்துள்ளது. இச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த பெண் உத்தியோகத்தர் வேலையையும் விட்டுவிட்டு இந்தியாவில் தங்கியிருந்துள்ளார்.

தற்போது மீண்டும் இலங்கை திரும்புவதற்கு எண்ணியுள்ள பெண் உத்தியோகத்தர் இது தொடா்பாக தென்பகுதியில் உள்ள முக்கிய தமிழ் அரசியல் பிரமுகருக்கு தெரியப்படுத்தி தனக்கான நியாயத்தையும் தனது சகோதரன் தொடா்பான நிலையையும் தெரிவிக்கும் படி அழுதுள்ளார். இச் சம்பவம் தொடர்பாகவும் அரச உயர்மட்டத்திற்கு தகவல்கள் தெரியப்படுத்தப்பட்டுள்ளன

Related

இலங்கை 2274795036326669111

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item