கெஞ்சி கோடோவை விடுவிக்க ஜப்பான் அரசுக்கு ஐ.எஸ்.தீவிரவாதிகள் 24 மணி நேரம் கெடு!
சிரியாவில் ஜப்பானை சேர்ந்த பத்திரிகை போட்டோகிராபர் கெஞ்சி கோடோ மற்றும் தனியார் பாதுகாப்பு துறை நிறுவனர் ஹருணா யுகாவா ஆகியோரை ஐ.எஸ்.தீவிரவாதி...
http://kandyskynews.blogspot.com/2015/01/24_28.html
சிரியாவில் ஜப்பானை சேர்ந்த பத்திரிகை போட்டோகிராபர் கெஞ்சி கோடோ மற்றும் தனியார் பாதுகாப்பு துறை நிறுவனர் ஹருணா யுகாவா ஆகியோரை ஐ.எஸ்.தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாக வைத்திருந்தனர். ரூ. 1225 கோடி பிணைத் தொகை கேட்டு 72 மணி நேர கெடு விதித்தனர்.அந்த ‘கெடு’ முடிந்ததை தொடர்ந்து ஹருணா யுகாவாவை தலை துண்டித்து கொலை செய்து வீடியோ வெளியிட்டனர். அதில், மற்றொரு பிணைக்கைதி கெஞ்சி கோடோவை விடுவிக்க ஜோர்டான் சிறையில் இருக்கும் ஐ.எஸ்.தீவிரவாத இயக்க தலைவரின் தங்கை சஜிதா அல் – ரிஷாவியை விடுதலை செய்ய வேண்டும் என நிபந்தனை விதித்தனர்.கடந்த 2005–ம் ஆண்டு ஜோர்டான் ஓட்டலில் நடந்த குண்டு வெடிப்பில் 60 பேர் பலியாகினர். இந்த வழக்கில் சஜிதா அல் – ரிஷாஜி கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கெஞ்சி கோடோவை உயிருடன் விடுவிக்க ஜப்பான் அரசுக்கு ஐ.எஸ்.தீவிரவாதிகள் 24 மணி நேரம் கெடு விதித்துள்ளனர். அத்துடன் ஐ.எஸ்.தீவிரவாதிகள் பிடியில் இருக்கும் ஜோர்டான் விமானி அல் – கசீஸ்பெக்கையும் கொலை செய்வோம் என மிரட்டியுள்ளனர்.
இது குறித்த புதிய வீடியோவும், செய்தியும் அனுப்பியுள்ளனர். அதில், 24 மணி நேரத்திற்குள் சஜிதா அல் – ரிஷாவியை ஜோர்டான் விடுதலை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் 24 மணி நேர கெடு முடிந்தவுடன் ஜப்பான் பிணைக் கைதி கெஞ்சி கோடோ கொலை செய்யப்படுவார். ஆனால் ஜோர்டான் விமானி அதற்கு முன்பாகவே கொல்லப்படுவார் என கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இந்த வீடியோவை தொடர்ந்து பிணைக் கைதிகளை மீட்க ஜப்பான் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதிகாரிகளின் அவசர கூட்டம் நடந்தது. ஜோர்டான் அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி பிணைக் கைதிகளை உயிருடன் மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறது.


Sri Lanka Rupee Exchange Rate