வடக்கில் இராணுவத்தைத் தூண்டிவிட்டு 3 மாதங்களில் ஆட்சியைப் பிடிக்க கோத்தபாய சதி! -அம்பலப்படுத்துகிறார் ராஜித சேனாரத்ன
வடக்கில் இனவாதத்தை தூண்டி, மூன்று மாதங்களில் ஆட்சியை பிடிக்க இராணுவ சூழ்ச்சி ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனா...

http://kandyskynews.blogspot.com/2015/01/3.html

வடக்கில் இனவாதத்தை தூண்டி, மூன்று மாதங்களில் ஆட்சியை பிடிக்க இராணுவ சூழ்ச்சி ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். முன்னாள் பாதுகாப்பு செயலாளரின் நெருங்கிய நண்பரான பிரிகேடியர் ஒருவர் இராணுவ முகாம் ஒன்றில் 400 தொடக்கம் 500 இராணுவத்தினருக்கு விசேட பயிற்சி அளிக்கிறார். அவர்களின் பெயர் என்வசம் உள்ளது. நான் அதனை ஒப்படைப்பேன்.
அந்த 400 பேரை வடக்கிற்கு அனுப்பி வடக்கில் இராணுவ முகாம்களுக்கு கல்வீச்சு நடத்தி தமிழ் மக்கள் கல் வீசுவதாக கதை சோடித்து இனவாதத்தை தூண்டி மூன்று மாதங்களில் ஆட்சியை கைப்பற்ற முயற்சிக்கின்றனர். எமக்கு இன்று இராணுவத்தில் இருந்தும் பொது மக்களிடம் இருந்தும் தகவல்கள் வருகின்றன. இந்த அரசை பாதுகாக்க முழு நாடும் ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. 2000 வரையான ஊழல் குற்றச்சாட்டுக்கள் இதுவரை எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளன. பொது மக்களே அவற்றை வழங்குகின்றனர்.
ஹெலிக்கொப்டர் வைத்துள்ள பெண் அரசியல்வாதி குறித்தும் தகவல் கிடைத்துள்ளது.அவரது கடவுச்சீட்டும் முடக்கப்பட்டுள்ளது. தற்போதைய பாதுகாப்பு செயலாளர் குறித்து பாரிய பிரச்சினை எழுத்துள்ளது. அவர் முன்னாள் பாதுகாப்பு செயலாளரின் நெருங்கிய நண்பர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து விசாரணை நடைபெற்றுக் கொண்டிக்கும் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க அவரால் முடியாது. தற்போதைய பாதுகாப்பு செயலாளர் குறித்து அனேக முறைப்பாடுகள் வந்துள்ளது. அவற்றை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.