சிறு தேரர்கள் மூவர் மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்த தேரருக்கு விளக்கமறியல்
அம்பாறை நகர் பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரை ஒன்றின் சிறுவர் பிக்குகள் மூவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தேரர் ஒருவரை எதிர்வரும் 5 ம் திகதிவரை...

http://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_931.html

இது பற்றி தெரியருவதாவது ;
அம்பாறை நகர் பகுதியில் உள்ள நகவம்புர பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட விகாரையின் தலைமை தேரரான 38 வயதுடைய தேரர் மற்றும் 9 வயது மற்றும் 13 வயது 11 வயதுடைய மூன்று சிறுவர்களான பிக்குகள் விகாரையில் தங்கியிருந்து மத போதனைகளில் ஈடுபட்டுவருகின்றனர்;.
இந்த நிலையில் விகாரையின் உள்ள 3 சிறுவர்களான தேரர்கள் மீது தலைமை தேரர் கடந்த சில காலங்களாக பாலியல் துஷ்பிரயோகம் மேற் கொண்டுவந்துள்ளார் இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறு தேரர்கள் கொழும்பிலுள்ள தலைமை தேரர் ஒருவருக்கு இது தொடர்பாக முறைப்பாடு செய்ததையடுத்து அவர் அம்பாறை நகர பொலிசாருக்கு அறிவித்தார்
இதனையடுத்து குறித்த தேரரை உடனடியாக பொலிசார் கைது செய்து அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி ஹேமந்த பெரேரா முன்னிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை(27) ஆஜர்படுத்தப்பட்டபோது தேரரை எதிர்வரும் 5 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் அவரை அங்கோடை வைத்திய சாலையில் உளவியல் பிரிவில் அனுமதித்து மருத்துவ அறிக்கை பெறுமாறு பாதிக்கப்பட்ட சிறு பிக்குகளை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு உத்தரவிட்டார்
இதேவேளை குறித்த தேரர் திருமணம் முடித்து குழந்தைகள் உள்ள நிலையில் மனைவி குழந்தைகளை விட்டுவிட்டு கடந்த சிலவருடங்களுக்கு முன்னர் தேரராக சேர்ந்து விகாரையின் தலைமை தேரராக இருப்பதுடன் இவரின் சட்டத்தரணியாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் ஆஜராகி வாதாடியுள்ளது குறிப்பிடத்தக்கது