மைத்ரி அரசை 3 மாதங்களில் கவிழ்க்க கோட்டாவின் ராணுவ படையணி சூழ்ச்சி; திட்டம் அம்பலம்!

வடக்கில் இனவாதத்தை தூண்டிவிட்டு மூன்று மாதங்களில் ஆட்சியை பிடிக்க இராணுவ சூழ்ச்சி ஒன்று முன்னெடுக்கப்படுவது குறித்து தகவல் கிடைத்துள்ளதென சு...

gotabaya-rajapaksa-200-newsவடக்கில் இனவாதத்தை தூண்டிவிட்டு மூன்று மாதங்களில் ஆட்சியை பிடிக்க இராணுவ சூழ்ச்சி ஒன்று முன்னெடுக்கப்படுவது குறித்து தகவல் கிடைத்துள்ளதென சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமாகிய ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

ரிவி தெரணவில் நேற்று (26) இரவு ஔிபரப்பான ´360´ அரசியல் நிகழ்ச்சியில் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் இது குறித்து கூறுகையில், ´எனக்கு செய்தி ஒன்று வந்துள்ளது. அதனை நான் அமைச்சரவை விசாரணைக்கு வழங்கவுள்ளேன். முன்னாள் பாதுகாப்பு செயலாளரின் நெருங்கிய நண்பரான பிரிகேடியர் ஒருவர் இராணுவ முகாம் ஒன்றில் 400 தொடக்கம் 5000 இராணுவத்தினருக்கு விசேட பயிற்சி அளிக்கிறார். அவர்களின் பெயர் என்வசம் உள்ளது. நான் அதனை ஒப்படைப்பேன்.

அந்த 400 பேரை வடக்கிற்கு அனுப்பி வடக்கில் இராணுவ முகாம்களுக்கு கல்வீச்சு நடத்தி தமிழ் மக்கள் கல் வீசுவதாக கதை சோடித்து இனவாதத்தை தூண்டி மூன்று மாதங்களில் ஆட்சியை கைப்பற்ற முயற்சிக்கின்றனர்.

எமக்கு இன்று இராணுவத்தில் இருந்து பொது மக்களிடம் இருந்து தகவல்கள் வருகின்றன. இந்த அரசாங்கத்தை பாதுகாக்க முழு நாடும் ஒத்துழைப்பு வழங்கி வருகிறது.

2000 வரையான ஊழல் குற்றச்சாட்டுக்கள் இதுவரை எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. பொது மக்களே அவற்றை வழங்குகின்றனர். ஹெலிக்கொப்டர் வைத்துள்ள பெண் அரசியல்வாதி குறித்தும் தகவல் கிடைத்துள்ளது. அவரது கடவுச்சீட்டும் முடக்கப்பட்டுள்ளது´ என ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

மேலும் தற்போதைய பாதுகாப்பு செயலாளர் குறித்து பாரிய பிரச்சினை எழுத்துள்ளதெனவும் அவர் முன்னாள் பாதுகாப்பு செயலாளரின் நெருங்கிய நண்பர் என்ற தகவல் வெளியானதாகவும் விசாரணை நடைபெற்றுக் கொண்டிக்கும் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க அவரால் முடியாது என்றும் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.

தற்போதைய பாதுகாப்பு செயலாளர் குறித்து அனேக முறைப்பாடுகள் வந்துள்ளதாகவும் அவற்றை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாகவும் அமைச்சரவையிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Related

இலங்கை 6432959911908982363

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item