ஒவ்வொரு பள்ளிவாசல்களிலும் விநாயகர் சிலைகளை வைப்பேன் -பாஜக MP

வாய்ப்பு கிடைத்தால் ஒவ்வொரு மசூதியிலும் விநாயகர்-கௌரி சிலைகளை வைப்பேன் என்று பாஜக எம்.பி. யோகி ஆதித்யநாத் பேசியது சர்ச்சையை ஏற்படுத்த...





ind


வாய்ப்பு கிடைத்தால் ஒவ்வொரு மசூதியிலும் விநாயகர்-கௌரி சிலைகளை வைப்பேன் என்று பாஜக எம்.பி. யோகி ஆதித்யநாத் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் விஷ்வ இந்து பரிஷத்தின் விராத் இந்து சம்மேளனம் நிகழ்ச்சியில் பாஜக எம்.பி. யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டு பேசியுள்ளார்.

அப்போது அவர் கூறுகையில், காசி விஸ்வநாதர் கோவிலை இடித்துவிட்டு முகலாய மன்னர் அவ்ரங்கஜீப் கியான்வாபி மசூதியை கட்டினார்.

இது எங்காவது நடந்துள்ளதா? இந்து சமாஜ் ஆட்கள் விஸ்வநாதரை தரிசிக்க செல்லும்போது எல்லாம் அந்த கியான்வாபி மசூதி நம்மை எரிச்சல் அடைய வைக்கிறது.

எனக்கு அனுமதி கிடைத்தால் ஒவ்வொரு மசூதியிலும் விநாயகர், கௌரி மற்றும் நந்தி சிலைகளை வைப்பேன்.

காசிக்கு அனைவரும் வரலாம். ஆனால் மக்கா, மதீனாவுக்கு முஸ்லீம்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

இது இந்துத்துவத்தின் நூற்றாண்டு, இந்தியாவில் மட்டும் அல்ல உலகம் முழுவதும் இந்துத்துவத்தின் நூற்றாண்டு நடைபெறுகிறது.

எனவே அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, நமக்கு உபதேசம் செய்வதை விட்டுவிட்டு, அவரது நாட்டில் உள்ள இன பிரச்சனையை கவனிக்கட்டும் என கூறியுள்ளார்.

Related

உலகம் 4162207032861319970

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item