பேஸ்புக் காதலனை சந்திக்க 5700 கி.மீ. பறந்து சென்ற அமெரிக்க இளம்பெண் மாயம்
பேஸ்புக் மூலம் காதலித்தவரை தேடி ஐந்தாயிரம் கிலோ மீட்டர்களை கடந்து சென்ற இளம்பெண் மாயமானதைப் பற்றி அமெரிக்க போலீசார் தீவிரமாக விசாரித்து வருக...


பேஸ்புக் மூலம் காதலித்தவரை தேடி ஐந்தாயிரம் கிலோ மீட்டர்களை கடந்து சென்ற இளம்பெண் மாயமானதைப் பற்றி அமெரிக்க போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
அமெரிக்காவின் கனெக்ட்டிகட் மாநிலத்தைச் சேர்ந்த ரெபேக்கா ஆத்தர்(17) என்ற பெண்ணுக்கு பேஸ்புக் மூலம் மொரோக்கோவில் வசித்து வந்த சிமி எல் அடாலா அறிமுகமானார். முதலில் நட்பாக பழகி வந்த இவர்கள் காதலிக்க ஆரம்பித்தனர்.
தன் காதலி ரெபேக்காவைச் சந்திக்க நினைத்த அடாலா மொராக்கோ நாட்டுக்கு வருவதற்காக அவருக்கு டிக்கெட் எடுத்து அனுப்பியிருந்தார். தன் காதலை சந்திக்கும் சந்தோசத்தில் இருந்த ரெபேக்கா, தன் வீட்டில் யாரிடமும் சொல்லாமல் மொராக்கோ புறப்பட்டுச் சென்றார்.
கடந்த ஜூலை 7-ஆம்தேதி மொராக்கோ சென்றடைந்தவர் எங்கே போனார்? என்ன ஆனார் என்பதைப் பற்றி தகவல் தெரியாததால் அவரது தாயார் போலீசாரிடம் ரெபேக்கா காணாமல் போனதாக புகார் அளித்துள்ளார்.
இதனால், அமெரிக்க போலீசாருக்கு அடாலா மீது சந்தேகம் எழும்பியுள்ளது. அவரைப் பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் அவரே ரெபேக்காவை கடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.
இந்த பெண்ணை கண்டறியும் முயற்சியில் அமெரிக்க மத்திய போலீசார் மற்றும் சிறப்பு போலீசார் இறங்கியுள்ளனர்.