என்னை அமைச்சர் ரிசார்ட் அவர்களுக்கு நன்றாக தெரியும் என்பதால் உண்மையான பெயரில் எழுதுகிறேன்!
"நேற்று நடந்த அந்த போராட்டம் என்பது அமைச்சர் ரிசார்ட் அவர்களுக்கு எதிராக பாயிஸ் மற்றும் ஹுனைஸ் பாரூக் அவர்களால் ஏவிவிடப்பட்ட போராட்டம...


"நேற்று நடந்த அந்த போராட்டம் என்பது அமைச்சர் ரிசார்ட் அவர்களுக்கு எதிராக பாயிஸ் மற்றும் ஹுனைஸ் பாரூக் அவர்களால் ஏவிவிடப்பட்ட போராட்டம்" என்ற ஒரு கருத்தாடலை வாசித்த பின் இந்த விடயத்தை எழுதியே ஆகா வேண்டும் என்ற நிலைக்கு நான் தள்ளப்பட்டுள்ளேன்!
பல வருடமாக இழந்திருக்கும் பாராளுமன்ற உறுப்பினரை பெற்றெடுக்க பல தியாகங்கள் செய்து, பல போராட்டங்களுக்கு மத்தியில், அரசியல்வாதிகளை காட்சிகளில் இருந்து பிரித்து எடுத்து, ஒரே கட்சிடின் கீழ் களமிறங்க அனைத்து முயற்சிகளும் நடைபெற்று முடிந்த தருணம், நாங்கள் நினைத்துப்பார்க்காத ஒரு தாக்குதல் எம்மை நோக்கி திடீர் என வந்தது!
அல்ஹாஜ் நவாவி அவர்கள் புத்தளம் மாவட்ட விழிப்புணர்வு மன்றத்தின் வேளைகளில் ஆரம்பத்தில் இருந்து தன்னை சமூகத்துக்காக ஈடுபடுத்தியவர்! இவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து தனித்துக் கேட்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, இறுதியில் UNP யில் அவருக்கு இடம் கொடுக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்ட பின்பு "தான் சுயேட்சையில் கேட்க தயாராக இருக்கிறேன்" என பகிரங்கமாக தெரிவித்து, ஊருக்காக ஒரே கட்சியில் களமிறங்கும் அரசியல்வாதிகளின் பட்டியலில் முதலிடத்தில் இருந்தவர்.
இப்படி எல்லா ஏற்பாடும் முடிந்த நேரம் அமைச்சர் ரிசார்ட் அவர்கள் தனது கட்சியின் கிளையை ஸ்தாபிப்பதற்கு சரியான சந்தர்ப்பம் இதுதான் என்று கருதி இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சமுகத்துக்காக ஒன்றுபட்ட அரசியல்வாதிகளில் முக்கியமான ஒருவரான நவாவி அவர்களை பிரித்து, எந்த கட்சி வேண்டாம் என்று புறம் தள்ளினோமோ அந்த கட்சியில் அவரை இணைத்து வாக்காளர்களின் மத்தியில் பிளவை ஏற்படுத்தி இருக்கிறார்! இவர் கட்சி சார்பாக அளிசப்ரி அவர்களை களமிறக்கி இருக்காலம் அனால் அவர் அதனை செய்யவில்லை!
அமைச்சர் ரிசார்ட் அவர்கள் புத்தளம் பெரிய பள்ளிவாசலில் வந்திறங்கி இருக்கிறார் என்ற செய்து அறிந்ததும் உடனடியாக அவருக்கு தொடர்பை ஏற்படுத்தி, பொது கூட்டமைப்பு பற்றி அறியாமல் எதையாவது செய்துவிடுவார் என்று பயத்துடன் புத்தளத்தில் நடக்கும் பொது கூட்டமைப்பு பற்றி அவருக்கு எத்திவைத்தேன் , தயவு செய்து இதனை குழப்பிவிடவேண்டாம் என்றும் இதற்கு உதவும் படியும் அவருக்கு கூறினேன். "நல்ல முடிவு ஒன்றை சனிக்கிழமை தருகிறேன்" என்று பதிலளித்தார்
ஆனால் அன்று நவாவி அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியிலே கைய்யொப்பம் இட்டதை பார்த்த உடன் "மீண்டும் எமது வாக்குகள் பிரியும், மீண்டும் பாராளுமன்ற நனவு கனவாகும்" என்ற ஒரு கவலையும், ஒரு ஆத்திரமும் தான் எனது நண்பர்களை அந்த போராட்டம் செய்ய தூண்டியது!
மாறாக இதனை திட்டமிட்டு, மன்னார் மாவட்ட மக்களை கொச்சைப்படுத்த ஏற்படுத்திய போராட்டம் அல்ல! என்றும் மன்னார் மக்களை மதிக்கும் மக்கள் நாங்கள், சொந்த இடத்தை பகிர்ந்த நாங்கள், ஒரு போதும் பிரதேச வாதம் பேசவதில்லை, இது மன்னார் அமைச்சருக்கு எதிராக செய்த போராட்டம் அல்ல.
இது ஒரு கட்சியின் தலைவருக்கு எதிராக செய்த போராட்டம், இது "எமது ஊருக்காக ஒன்றுபடுவோம்" என்று பெரியபள்ளியில் வாக்குத்தந்த புத்தளத்தின் வர்த்தகர் அலி சப்ரி அவர்களிக்கு எதிராக நடாத்தப்பட்ட போராட்டம்.
அமைச்சர் ரிசார்ட் அவர்கள் அவரது கட்சியை எங்கு வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம், ஏன் புத்தளத்திலும் கூட ஆரம்பிக்கலாம் ஆனால் அவருக்கும் அவரது குடும்பத்துக்கும் அவரது மக்களுக்கும் உதவி செய்த இந்த புத்தளம் ஒன்றுபட்டு ஒரு MP யை பெற அனைத்து முயற்சியும் மேற்கொண்ட பின்னர் அதில் இருந்த நவாவி அவர்களை ஏன் பிரித்து எடுக்கவேண்டும்? அவருக்கு அலி சப்ரி அவர்களை ஏன் தேர்தலில் களமிறங்க வைத்திருக்க முடியாது? என்பதுதான் எங்கள் கேள்வி! அவரது கட்சி வளர்வதற்கு எங்கள் ஊரை மீண்டும் அரசியல் அனாதையாக முற்பட்டு இருக்கிறார்!
எது எப்படியாக இருந்தாலும் இன்று நவாவி அவர்கள் யானைச்சின்னத்தில் போட்டியிடுகிறார் அதற்கு காரணம் நாங்கள் அவருக்கு "ஒரு தேசியப்பட்டியல் MP பதவியை பெற்றுத்தருவோம்" என்று சத்தியம் செய்து இருக்கிறோம் என்று ஒரு சில ஆதரவாளர்கள் கூறிகிறார்கள், அப்படி என்றால் அவரை தேர்தலில் இறங்கி வேலை செய்யாமல், வாக்காளர்களை பொய் சொல்லி ஏமாற்றாமல், வாக்குகளை பிரிக்காமல் அமைதியாக இருக்கும்படி தயவாக வேண்டிக்கொள்கிறோம்!
ஊருக்காக ஒற்றுமைப்பட்டு இருக்கிறோம், அமைதியாக இருந்து ஒரு தேசியப்பட்டியல் மூலம் நீங்களும் வாருங்கள், மக்களால் வாக்குகள் கொடுக்கப்பட்டு, மக்காளால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு உறுப்பினரை நாங்கள் பாராளுமன்றம் கொண்டு வருகிறோம்!