ஐ.எஸ். படைகள் முன்னேறுகிறது: ஈராக்கில் 90 ஆயிரம் மக்கள் தப்பியோட்டம்
ஈராக் நாட்டில் அன்பர் மாகாணம் நோக்கி ஐ.எஸ்.படைகள் முன்னேறி வருவதால், சுமார் 90 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் ...
http://kandyskynews.blogspot.com/2015/04/90_24.html
ஈராக் நாட்டில் அன்பர் மாகாணம் நோக்கி ஐ.எஸ்.படைகள் முன்னேறி வருவதால், சுமார் 90 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அந்த மாகாணத்தில் இருந்து வெளியேறி உள்ளார்கள்.
இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்கள் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
அன்பர் மாகாணத்தை நோக்கி ஐ.எஸ்.படைகள் வேகமாக முன்னேறி வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு அந்த மாகாணத்தின் தலைநகரான ரமதி மற்றும் சில கிராமங்கள் ஐ.எஸ்.அமைப்பினரால் கைப்பற்றப்பட்டன. அதன் காரணமாக மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.
இதுவரை சுமார் 90 ஆயிரத்துக்கு அதிகமானவர்கள் வெளியேறி இருக்கிறார்கள். அவர்களுக்கு உணவு, நீர் மற்றும் இருப்பிடம் ஆகியவற்றை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மக்கள் பலரும் வெளியேறி வருவதாலும், கடைகள் பலவும் மூடப்பட்டிருப்பதாலும், ரமதி ஆள் நடமாட்டம் இன்றி காட்சியளிக்கிறது.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.