திப்பு சுல்தானின் கலை நயம் மிக்க ஆயுதங்கள் 56 கோடிக்கு ஏலம் (PHOTOS)
மைசூரை ஆண்ட திப்பு சுல்தான் பயன்படுத்திய 30 ஆயுதங்கள் லண்டன் போன்ஹாம்ஸ் ஏல நிறுவனத்தில் சுமார் 6 மில்லியன் பவுண்களுக்கும் மேல் ஏலம் போனது....
http://kandyskynews.blogspot.com/2015/04/56-photos.html
திப்பு சுல்தான் பயன்படுத்திய இந்த ஆயுதங்களில் புலி சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது அவர் பயன்படுத்திய , விலை உயர்ந்த மணிகள் பதித்த, புலித்தலையுடன் கூடிய வாள் 2.15 மில்லியன் பவுண்களுக்கு ஏலம் போனது.
அதே போல, அவர் பயன்படுத்திய இரு-வேட்டு விளையாட்டுத் துப்பாக்கி 7.22 இலட்சம் பவுண்களுக்கு ஏலம் போனது.
ஏலம் போன இந்த ஆயுதக்குவியலில், வளைவான கத்திகள், மணிகள் பதித்த வாள், அம்புகள், வேலைப்பாடுடன் கூடிய தலைக்கவசங்கள், பிஸ்டல்கள், 3 பவுண் எடையுள்ள குண்டுகளை வீசும் பீரங்கி ஆகியவை அடங்கும்.
இவை அனைத்துமே கலை நயம் மிக்க வகையில் நேர்த்தியாக செய்யப்பட்டிருந்தன.
இந்திய மற்றும் இஸ்லாமிய கலைப் பொருட்களின் ஏலம் என்று வர்ணிக்கப்பட்ட இந்த ஏலத்தில் மொத்தமாக சுமார் 7.4 மில்லியன் பவுண்களுக்கு பொருட்கள் ஏலம் போயின.
திப்பு சுல்தான் அப்போது இந்தியாவில் கால் ஊன்றிக்கொண்டிருந்த கிழக்கிந்தியக் நிறுவனத்தின் கடுமையான எதிர்ப்பாளராக இருந்தவர்.
அவர் 1799ம் ஆண்டில் இறக்கும்வரை, ஆங்கிலேயர்களின் கிழக்கிந்தியக் நிறுவனத்தை எதிர்த்து சண்டையிட்டார் எனபது குறிப்பிடதக்கது.
இன்றைய ஏவுகணை தொழில்நுட்பத்தின் தந்தை திப்புசுல்தான் என்பது குறிப்பிடதக்கது.