ராஜபக்சவின் சூழ்ச்சிப் பொறியில் நாட்டை மீளவும் சிக்க வைக்கக் கூடாது: சோமவன்ச அமரசிங்க

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சூழ்ச்சிப் பொறியில் நாட்டை மீளவும் சிக்க வைக்கக் கூடாது என ஜே.வி.பி கட்சியின் முன்னாள் தலைவர் சோமவன்ச...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சூழ்ச்சிப் பொறியில் நாட்டை மீளவும் சிக்க வைக்கக் கூடாது என ஜே.வி.பி கட்சியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவி வரும் ஸ்திரமற்ற தன்மையை நீக்குவதற்கு முற்போக்கு சக்திகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

இந்த முற்போக்கு சக்திகள், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மஹிந்தவை தூக்கிச் செல்லும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்கமற்ற தரப்பை தோற்கடிக்க வேண்டும்.

அரசியலமைப்பு திருத்தங்களின் ஊடாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்கும் முயற்சிகளுக்கு தோல்வியடைந்த தரப்புக்கள் எவ்வளவு அழுத்தங்களை பிரயோகித்தன என்பது வெட்ட வெளிச்சமாகியிருந்தது.

ராஜபக்சவின் சூழ்ச்சிகளில் நாடு சிக்குவதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

போராட்டத்தை முன்னெடுக்கக் கூடிய முற்போக்கு சக்திகளை ஒன்றிணைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றேன் என சோமவன்ச அமரசிங்க சிங்கள பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

Related

தலைப்பு செய்தி 3599350018056011175

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item