மஹிந்தவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் நடிகர் விஜய்!?
சிறிலங்காவில் போர்க்குற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த பல்வேறு தரப்பினர் முய...

இதற்கு வலுச்சேர்க்கும் முகமாக புலம் பெயர் தமிழ் அமைப்பு ஒன்று பத்து இலட்சம் கையெழுத்தும் பெறும் நடவடிக்கை உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
கையெழுத்து வேட்டை தமிழகத்திலும் நடைபெற்று வருகிறது. இதற்கு ஆதரவாக நடிகர் விஜயையும் இணைந்துள்ளார்.
சிறிலங்காவில் நடந்தது இனப்படுகொலைதான் என சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிரூபிக்க மக்களிடம் இருந்து 10 லட்சம் வாக்குகள் கேட்டிருக்கிறது.. ஆனால் இதுவரை 2 லட்சம் வாக்குகள்தான் வந்திருக்கு.. இத நினைத்து கண்டிப்பா நாம எல்லாம் வெட்கப்படனும்.. உலகத்துல கிட்டத்தட்ட 13 கோடி தமிழ் மக்கள் பரவி வாழ்கிறோம். குறைந்தபட்சம் ஒரு கோடி பேராவது இணையதளம் பயன்படுத்தறோம். ஆனாலும் வெறும் 10 லட்சம் வாக்குகளுக்கு இந்த முக்கு முக்குறோம்.. இந்த இணைப்பை பயன்படுத்தி 10 லட்சத்தில் நீங்கள் ஒருவர் இணைந்து கொள்ளுங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நடிகர் விஜய்யின் ரசிகர்களால் உருவாக்கப்பட்டது @Actor_Vijay என்கிறது கணக்கு முகப்பு பக்கம். நடிகர் விஜய்யின் அதிகாரப்பூர்வமான @actorvijay என்ற ட்விட்டர் பக்கத்தை தொடர்ந்து இது ரீ ட்வீட் செய்தும் வருகிறது.
இப்படியான நிலையில் திடீரென சிறிலங்கா பிரச்சனையில் விஜய்யை அவரது ரசிகர்களே கோர்த்து விட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.