மஹிந்தவை தோற்கடிக்க வியூகம் அமைக்கும் ரணில் - சந்திரிக்கா!
சிறிலங்காவில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளதை அடுத்து, கொழும்பு அரசியல் களம் ச...
http://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_89.html
சிறிலங்காவில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளதை அடுத்து, கொழும்பு அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.
இந்நிலையில் மஹிந்த மீண்டும் அரசியலுக்குள் வரவிடாமல் தடுப்பதில் மற்றைய கட்சிகள் தீவிர முயற்சிகளை எடுத்து வருகின்றன.
இதன் முதற்கட்டமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பின் போது தற்போதைய அரசியல் நிலை குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளது.
மஹிந்தவை அதிகாரத்துக்கு வரவிடாமல் தடுப்பதற்கான உத்திகள் குறித்தே ரணில் விக்கிரமசிங்கவும், சந்திரிகா குமாரதுங்கவும் கலந்துரையாடவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்சவை தோற்கடிக்க பொதுவான கூட்டணி ஒன்று அமைக்கப்பட்டதனைப் போன்று, பொதுத் தேர்தலிலும் கூட்டணி ஒன்றை அமைப்பது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்சவைத் தோற்கடிப்பதில், ரணில் – சந்திரிகா இணைந்து எடுத்த முடிவுகளே முக்கிய காரணமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Sri Lanka Rupee Exchange Rate