யாழில் மூவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிப்பு
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இருவேறு கொலைச் சம்பவங்களின் குற்றவாளிகள் மூவருக்கு யாழ். மேல் நீதிமன்றத்தினால் இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டுள்...


2004 ஆம் ஆண்டின் ஒக்டோபர் 25 ஆம் திகதி கொடிகாமம் – கச்சாய் வீதிப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை யாழ். மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்தது.
இந்த வழக்கில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட பிரதிவாதிகள் இருவருக்கும் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இதேவேளை, 2006 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி யாழ். மந்துவில் கிழக்கு பகுதியிலும் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் குற்றவாளிக்கு யாழ். மேல் நீதிமன்றத்தினால் இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டது.
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றி அண்மையில் இடமாற்றம் பெற்ற அன்னலிங்கம் பிரேம்சங்கர் முன்னிலையில் இறுதிக்கட்டம் வரை இந்த கொலைச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள் இடம்பெற்றிருந்தன.
அத்துடன், இந்த வழக்கின் தொகுப்புரை நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் முன்னிலையில் இடம்பெற்றதால் நீதியரசரின் விசேட அனுமதியுடன் யாழ். மேல் நீதிமன்றத்தில் ஆஜராகி அவரே குற்றவாளிக்கு மரண தண்டனையை அறிவித்தார்.