யாழில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட இளம்பெண் கைது

யாழில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட பெண்ணொருவர் மக்களால் மடக்கி பிடிக்கப்பட்ட சம்பவம் இன்று பதிவாகியுள்ளது. வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் ஆலயத...

யாழில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட பெண்ணொருவர் மக்களால் மடக்கி பிடிக்கப்பட்ட சம்பவம் இன்று பதிவாகியுள்ளது.

வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் ஆலயத்தின் இன்று நடைபெற்ற தேர் திருவிழாவில் திருடும் நடவடிக்கையில் குறித்த பெண் ஈடுபட்டுள்ளார்.

இந்தப் பெண் திருகோணமலையைச் சேர்ந்த இளம் யுவதி என ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

தேர்த் திருவிழாவில் கலந்து கொண்டிருந்த பக்தர்களின் தங்கச் சங்கிலிகளை கொள்ளையிட்ட திருகோணமலையை சேர்ந்த இளம் யுவதி ஒருவர் பொதுமக்களால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

தேர் திருவிழாவின் போது வயதான பெண் ஒருவரின் கழுத்திலிருந்த சங்கிலியை யாரோ இழுப்பது போன்ற உணர்வு தென்பட்ட நிலையில் குறித்த பெண் திரும்பிப் பார்த்தபோது சங்கிலியை பிடித்தவாறு குறித்த பெண் நின்றுள்ளார். இதனையடுத்து வயதான பெண் சத்தமிட்டுள்ளார்.

இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள், குறித்த பெண்ணை மடக்கிப் பிடித்துள்ளனர்.

இதன்போது தான் திருகோணமலையை சேர்ந்தவர் எனவும், திருடும் நோக்கில் மேலும் 3 பெண்கள் வந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

குறித்த பெண்ணிடமிருந்து தொலைபேசி ஒன்றும், 15 ஆயிரம் ரூபா பணமும் மீட்கப்பட்டுள்ளது. அத்துடன் களவாடப்பட்ட 4 சங்கிலியும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மற்றைய 3 பெண்களையும் பொலிஸார் தேடி வருகின்றனர்.

Related

இலங்கை 6633722303512889445

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item