உலகின் வயதானவர் காலமானார்
உலகின் வயதானவர் என்று கருதப்படும் ஜப்பானைச் சேர்ந்த 117 வயதான மிசாவோ ஒகாவா என்ற பெண் இன்று காலமானார். இவர் ஜப்பானின் ஒசாகா நகரத்தை சேர்ந்...

இவர் ஜப்பானின் ஒசாகா நகரத்தை சேர்ந்தவர். ஒசாகா நகரத்தில் அமைத்துள்ள மருத்துவமனையில் அவர் மரணமானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இவர் 1898ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5ஆம் திகதி பிறந்தார்.
இவருக்கு மூன்று பிள்ளைகளும், 4 பேரப்பிள்ளைகளும் 6 கொள்ளுப்பேரப்பிள்ளைகளும் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, 117வது வயதை பிறந்த தினத்தை அண்மையில் கொண்டாடிய போது உரையாற்றிய மிசாவோ ஒகாவா, தமது வாழ்நாளை மிக நீண்டதாக கருதவில்லை என்று குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.