எராஜ் நாட்டைவிட்டு தப்பியோட ராஜித உதவி
ஹம்பாந்தோட்டை நகர மேயர் எராஜ் பெர்ணான்டோ நாட்டை விட்டு தப்பியோடுவதற்கு அமைச்சர் ராஜித சேனாரத்ன ஒத்துழைப்பு வழங்கினார் என தெரிவிக்கப்பட்டுள்...

http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_58.html

ஹம்பாந்தோட்டை நகர மேயர் எராஜ் பெர்ணான்டோ நாட்டை விட்டு தப்பியோடுவதற்கு அமைச்சர் ராஜித சேனாரத்ன ஒத்துழைப்பு வழங்கினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு துப்பாக்கியொன்றை காண்பித்து மிரட்டி பிரபல்யமடைந்த எராஜ் பெர்ணான்டோ,
கடந்த கால அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் செய்த குற்றச்செயல்களுக்கு இவர் கைது செய்யப்படலாம் என்ற நிலை காணப்பட்டமையை தொடர்ந்து அமைச்சரின் உதவியுடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
அத்துடன் குறித்த மேயர் தற்போது சிங்கப்பூரில் வசித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
மகிந்த அரசாங்கத்தில் ஊழல் மோசடிகளில் ஈடுப்பட்ட அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் நாட்டைவிட்டு வெளியேற உதவும் குழுவில் முக்கிய அங்கத்துவம் வகிப்பது அமைச்சர் ராஜித சேனாரத்ன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 1988 மற்றும் 89ம் ஆண்டுகளில் மக்கள் விடுதலை முன்னணிக்கு எதிராக செயற்பட்டு பல படுகொலைகளை செய்த அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிய ஆயுத குழுவின் முக்கிய உறுப்பினர் எராஜ் பெர்ணான்டோ என்பது குறிப்பிடத்தக்கது.