மன அமைதியின்றி குடிபோதையில் மிதக்கும் மஹிந்த!
சிறிலங்காவில் சர்வதிகார ஆட்சியை நடத்தி வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மன விரக்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆடம்பர வாழ்க...

சிறிலங்காவில் சர்வதிகார ஆட்சியை நடத்தி வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மன விரக்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆடம்பர வாழ்க்கையில் திளைந்த அவரின் குடும்பம் தற்போது சாதாரண நிலைக்கு மாறியுள்ளமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக மஹிந்தவுக்கு நெருக்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் கொன்று குவிக்கப்பட்ட தற்போது மீட்டெழுந்துள்ளதாகவும், மஹிந்தவை துரத்தி வருவதாகவும் தெரிய வருகிறது.
மஹிந்தவினால் நிம்மதியாக படுத்து உறங்க முடியாமல் அவஸ்தைப் படுவதாகவும் நித்திரைக்கு முன் அதிக மதுபானங்களை அருந்துவதாகவும் அவரின் நண்பர்கள் வருத்தம் வெளியிட்டுள்ளனர்.
அதிகாரத்தில் இருந்த போது இருந்த ஆடம்பர வசதிகள், ஆணைகள் போன்றவைகளை இழந்தப்படியால் மன விரக்தியால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது ஏற்பாடு செய்த மக்கள் சந்திப்புகள் போல் இப்பொழுதும் செய்யப்படுகிறது.
சில சோதிடர்கள், மந்திரவாதிகளின் ஆலோசனைப்படி பகல் நேரங்களில் சமய நிகழ்வுகளை ஏற்பாடு செய்து அதில் கலந்து கொண்டு மக்களை சந்திக்க ஏற்பாடுகளை செய்யப்பட்டு அவைகள் ஊடகங்கள் மூலம் வெளியிடப்படுவதாகவும் இவைகள் அனைத்தும் அவரை திருப்திபடுத்த எடுத்த நடவடிக்கைகள் என தெரிவிக்கப்படுகிறது. எனினும் மஹிந்தவின் மனம் அமைதி கொள்ளாமல் அவதிப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான நடவடிக்கைகளை ஏற்பாடு செய்ய அவரின் அதிகார காலத்தில் ஊழல் செய்து பெறப்பட்ட கோடிக்கணக்கான பணம் செலவிடப்படுவதாக தெரியவருகின்றது