பெண்களை குறிவைக்கும் ஐ.எஸ்: அதிர்ச்சி தகவல்
ஐ.எஸ் அமைப்பினர் பிரான்ஸில் இருக்கும் ஆண்களை விட பெண்களையே அதிகளவில் தங்கள் குழுவில் இணைத்து கொள்ள குறி வைப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளன...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_601.html
பிரான்ஸில் கடந்த ஏப்ரல் 2014ல் நடந்த தாக்குதலை அடுத்து, சந்தேகிக்கப்படும் பயங்கரவாதம் பற்றி ரகசிய தகவலளிக்க ஹொட்லைனை அறிமுகப்படுத்தியது.
இந்த ஹொட்லைன் மூலம் 3,640 தகவல்கள் வந்துள்ளதாகவும் அவற்றில் பெரும்பாலானவை பெற்றோர்களிடம் இருந்து வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
அவர்கள், தங்கள் குழந்தைகள் ஐ.எஸ் அமைப்பில் சேருவதற்காக சிரியா மற்றும் ஈராக்கிற்கு செல்ல முயல்கிறார்களோ என்று சந்தேகம் உள்ளதாக கவலையுடன் தெரிவித்துள்ளனர்.
இதனை செவ்வாயன்று, பாரிஸை சார்ந்த பயங்கரவாத பகுப்பாய்வு மைய தலைவர் (Paris-based Center for the Analysis of Terrorism) Jean-Charles Brisard செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதுவரை ஆண்களை அதிகளவில் குறிவைத்து செயல்பட்ட ஐ.எஸ் அமைப்பினர், தற்போது பெண்களை பெருமளவில் குறிவைக்க தொடங்கியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் வந்த ரகசிய தகவல்களின் எண்ணிக்கையின் படி, பெண்களில் 135 பேர் பற்றி சந்தேக தகவல்கள் வந்ததாகவும், ஆண்களில் 126 பேர் பற்றி மட்டுமே தகவல்கள் வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி மேலதிக தகவல்களை அதிகாரிகள் அறிவிக்காத நிலையில், இந்த தகவல்கள் ஐ.எஸ். அமைப்பினர் பெண்களை குறிவைத்து பிரச்சாரம் செய்ய தொடங்கியுள்ளதை தான் காட்டுவதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு இதே நேரத்தில் 43 சதவீத சந்தேக தகவல்கள் மட்டுமே பெண்கள் பற்றி வந்ததாகவும் தெரியவந்துள்ளது.
Jean-Charles Brisard மேலும் கூறுகையில், ஐ.எஸ் அமைப்பின் இந்த பாலின அணுகுமுறை மாற்றத்தில் எந்த ஆச்சர்யமும் இல்லை.
பிரான்ஸில் உள்ள பெண்களில் பலர் மனிதாபிமான காரணங்களை காட்டி ஐ.எஸ் அமைப்பில் சேர ஈர்க்கப்படுகின்றனர்.
மேலும், அவர்கள் பிரான்ஸ் மக்களிடம் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் புகைப்படங்களை காட்டி பிரச்சாரம் செய்கின்றனர். அந்த புகைப்படங்கள் ஆண்களை விட பெண்களை அதிகளவில் செயல்பட தூண்டுகிறது.
பெண்கள் மீதான சந்தேக தகவல்களின் எண்ணிக்கை மட்டும் தான் அதிகளவில் உயர்ந்துள்ளது. ஆனால் பிரான்ஸில் இருந்து ஈராக் மற்றும் சிரியா சென்றுள்ள பெண்களின் எண்ணிக்கை 400 பேர்களில் 90 பேராக தான் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
மேலும், இவ்வாறு குறிவைக்கப்படும் பெண்களின் வயது 15 முதல் 25 வரை உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.