சுதந்திர கட்சியின் உறுப்பினர்களுக்கு அபயக்கரம் நீட்டும் உதயகம்மன்பில

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற் குழுவில் இருந்து நால்வர் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக புதியவர்கள் சிலர் நியமிக்கப்பட்டுள்ள...

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற் குழுவில் இருந்து நால்வர் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக புதியவர்கள் சிலர் நியமிக்கப்பட்டுள்ளதன் மூலம், கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும் என பிவிதுறு ஹெல உருமய தலைவரும், மேல் மாகாண சபை உறுப்பினருமான உதயகம்மன்பில எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவ்வாறான ஒரு தீர்மானத்தை கட்சி மேற்கொண்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து,சுதந்திர கட்சியின் 40 உறுப்பினர்களுடன் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அவர் சிங்கள ஊடகமொன்றிற்கு செய்தி வழங்கியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வெற்றிக்காக கடந்த தேர்தலின் போது செயற்பட்டமையே, இந்த நான்கு உறுப்பினர்களும் கட்சியின் மத்திய செயற்குழுவில் இருந்து நீக்கப்பட்டமைக்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போது சுதந்திர கட்சியின் தோல்விக்காக அரும்பாடுபட்ட நால்வர் மத்திய செயற்குழுவில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இது கட்சிக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், கட்சியைப் பாதுகாக்க வேண்டிய தேவை ஒன்று ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கான ஆரம்ப நடவடிக்கையாக எதிர்வரும் 8ஆம் திகதி குருநாகலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்காக நடைபெறவுள்ள கூட்டத்தில், சுதந்திர கட்சியில் இருந்து நீக்கப்பட்ட 04 பேரும் எம்முடன் இணையவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Related

இலங்கை 8866455610168497804

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item