அல்கொய்தா தலைவரை பலிவாங்கிய ஆளில்லா விமானம் (வீடியோ இணைப்பு)
அமெரிக்கா நடத்திய குண்டுவீச்சில் அல்கொய்தா அமைப்பின் தலைவர் அல்-ருபைஷ் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏமனில் அல்கொய்தாவின் பலம் ...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_441.html

ஏமனில் அல்கொய்தாவின் பலம் அதிகரித்து வருவதால், அவர்களை அழிக்க அமெரிக்கா ஆளில்லா விமானங்கள் மூலம் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஏமனின் தென் கிழக்கு பகுதியில் உள்ள ஹ்ட்ரமாவ்த்(Hatmath) மாகாணத்தில் ஆரேபிய தீபகற்பத்துக்கான அல்கொய்தா தலைவர் இப்ராகிம் ருபைஷ்(Ibrahim al-Rubeish Age-35) செல்வதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் அங்கு குண்டு வீசி தாக்கின.இதில் இப்ராகிம், அல்–ருபைஷ் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்தனர்.
இந்த தகவலை அரேபிய தீபகற்பத்தின் அல்கொய்தா பிரிவு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.


Sri Lanka Rupee Exchange Rate