மைத்திரியின் ஆதரவாளர்கள் ஐ.தே.கவுடன் ஒன்றிணைவு
நடைபெறவுள்ள பொது தேர்தலின் போது வெற்றி பெறுவதற்காக ஜனாதிபதியின் ஆதரவாளர்கள் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளனர். ...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_925.html
ஜனாதிபதியின் ஆதரவாளர்களும் ஐக்கிய தேசிய கட்சியின் கீழான கூட்டணியும் ஒன்றிணைந்து செயற்படும் என அரச தகவல்கள் தெரிவித்துள்ளன.
தற்போது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்குள் பாரியளவில் உட்பூசல்கள் இடம்பெற்று வருகின்றன.
பல உறுப்பினர்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கவும் மறுத்து வருகின்றனர்.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை நியமிக்குமாறு பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது செயற்பட்டதை போன்று பொது தேர்தலிலும் செயற்படுவது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதுடன்,
நாட்டில் தொடர்ந்தும் நல்லாட்சியை நிலைநாட்டுவதே இந்த ஒன்றிணைவின் நோக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Sri Lanka Rupee Exchange Rate