நின்று போன இதயம்….திக் திக் நிமிடங்கள்: உயிரோடு வந்த நபர்

துருக்கி நாட்டில் மாரடைப்பால் இதயம் நின்று போன நபருக்கு, மருத்துவர்களின் விடாமுயற்சியால் அவர் உயிர்பிழைத்துள்ள அதிசய சம்பவம் நிகழ்ந்துள்ளத...

man_comesalive_002
துருக்கி நாட்டில் மாரடைப்பால் இதயம் நின்று போன நபருக்கு, மருத்துவர்களின் விடாமுயற்சியால் அவர் உயிர்பிழைத்துள்ள அதிசய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

துருக்கியின் தலைநகரமான அங்காராவை(Ankara) சேர்ந்த Bulent Sonmez (40) என்பவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவரது இதயத்துடிப்பு நின்றுபோய்விட்டதால், மருத்துவர்கள் அவரை சிகிச்சைக்காக ஐஸ் பெட்டியில் வைத்துள்ளனர், இதனைத் தொடர்ந்து அவரது இதயம் துடிக்க ஆரம்பித்துள்ளது.

மேலும், அவரது உடலின் வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்க்கு குறைந்துவிட்டதால், அவருக்கு சுவாசிக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அவருக்கு hypothermia treatment வழங்கப்பட்டது. 24 மணி நேரம் மருத்துவர்கள் முயற்சி செய்து Bulent-ஐ காப்பாற்றியுள்ளனர்.

இதுகுறித்து அவரது மனைவி, Sibel Sonmez (39) கூறியதாவது, இதை என்னால் நம்பமுடியவில்லை, ஏதே ஒரு திரைப்படம் போல் உணருகிறேன், இதனை எப்படி விவரித்துக்கூறுவது என்று தெரியவில்லை என கூறியுள்ளார்.


மேலும், புகைப்படங்களோடு நடந்தவற்றை அவரிடம் கூறுவதற்கு ஆவலோடு இருக்கிறேன், ஆனால் அதற்கான நேரம் இருக்கிறது என்றும் எனது இரண்டு பிள்ளைகளும், தந்தையை பார்ப்பதற்காக ஆவலோடு வீட்டில் காத்திருக்கிறார்கள் என மகிழ்ச்சி பொங்க கூறியுள்ளார்.

இதுகுறித்து மருத்துவர் Dr Omer Zuhtu கூறியதாவது, Bulent Sonmez 8 மாதகாலம் ஓய்வு எடுக்க வேண்டும், ஏனெனில் அவர் இழந்த நினைவுகளை திரும்ப பெற வேண்டும்.

நாங்கள் அளித்துள்ள hypothermia treatment சிகிச்சையை, மாரடைப்பு நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பிரச்சனை ஏற்படும்போது பயன்படுத்துவோம், மேலும் இந்த சிகிச்சையை அதிகமாக பயன்படுத்துவில்லை.

ஏனெனில் இந்த சிகிச்சை அவர்களின் மூளையை பாதிக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் தற்போது Bulent Sonmez-யின் வாழ்க்கையை காப்பாற்றியுள்ளோம் என்று கூறியுள்ளார்…

Related

உலகம் 950094907672616352

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item