முன்னாள் ஜனாதிபதியின் வீட்டுக்கு விருந்துக்கு செல்லும் எம்.பிக்கள்
தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் 16ம் திகதி முன்னாள் ஜனாதிபதி ...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_855.html
தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் 16ம் திகதி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தங்காலை வீட்டுக்கு விருந்தாளி பயணத்தை மேற்கொள்ள உள்ளதாக தெரியவருகிறது.
காமினி லொக்குகே, குமார் வெல்கம, டளஸ் அழகபெரும, பந்துல குணவர்தன, விமல் வீரவன்ஸ, வாசுதேவ நாணயக்கார, தினேஷ் குணவர்தன, ஜீ.எல். பீரிஸ், டி.பி. ஏக்கநாயக்க, எஸ்.எம். சந்திரசேன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, மகிந்தானந்த அளுத்கமகே, சாலிந்த திஸாநாயக்க, சரத் குமார குணரத்ன, ரோஹித்த அபேகுணவர்தன, வீரகுமார திஸாநாயக்க, விதுர விக்ரமநாயக்க,
ரஞ்சித் டி சொய்சா, ஜானக்க வக்கும்புர, வீ.கே.இந்திக, ரொஷான் ரணசிங்க, ஜானக்க பிரிந்த பண்டார, ஸேஹான் சேமசிங்க, மனுஷ நாணயக்கார, எதித்த லொக்குபண்டார, கீதாஞ்சன குணவர்தன, திலும் அமுனுகம, லொஹான் ரத்வத்தே, சரண குணவர்தன, வை.பி. பத்மசிறி, சாமிக புத்ததாச, லக்ஷமன் வசந்த பெரேரா,
ஸ்ரீயானி விஜேவிக்ரம, மாலனி பொன்சேகா, சரத் வீரசேகர ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களே முன்னாள் ஜனாதிபதியின் வீட்டுக்கு விருந்தாளி பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரியவருகிறது.
மத்திய செயற்குழுவிலிருந்து நீக்கப்பட்டவர்கள் மஹிந்தவை பார்வையிட செல்ல உள்ளனர்
மத்திய செயற்குழவிலிருந்து நீக்கப்பட்டவர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பார்வையிடச் செல்ல உள்ளனர்.
பந்துல குணவர்தன, எச்.எம்.சந்திரசேன, சாலிந்த திஸாநாயக்க, டி.பீ.ஏக்கநாயக்க மற்றும் ரோஹித அபேகுணவர்தன ஆகியோர் முன்னாள் ஜனாதிபதியை பார்வையிடச் செல்ல உள்ளனர்.
சிங்கள புத்தாண்டு மரபுகளில் ஒன்றான உறவினர்களை பார்வையிடும் நிகழ்விற்காக இவ்வாறு ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் மெதமுலனவிற்கு செல்ல உள்ளனர்.
நாளை குறித்த ஐந்து பேரும் மஹிந்தவை பார்வையிட மெதமுலனவிற்கு செல்ல உள்ளனர்.
ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்காமல் தம்மை மத்திய செயற்குழுவிலிருந்து நீக்கியதாக இவர்கள் முன்னாள் ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாளை மஹிந்தவை பார்வையிடச் செல்வார்கள் என முன்னாள் அமைச்சர் குமார வெல்கம சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இவர்களுக்கு மேலதிகமாக ஏற்கனவே மஹிந்தானந்த, விமல் வீரவன்ச, குமார் வெல்கம, டலஸ் அழப்பெரும, மனுஸ நாணக்கார, உதித்த லொக்குபண்டார உள்ளிட்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதியை பார்வையிட செல்ல உள்ளனர்.
தொடர்புடைய செய்தி: