மொரட்டுவை நிதி நிறுவன கொள்ளைச் சம்பவம் தொடர்பில் அறுவர் கைது

மொரட்டுவை பகுதியிலுள்ள நிதி நிறுவனமொன்றில் கொள்ளையிட்டதாகக் கூறப்படும் பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அண்மையி...

மொரட்டுவை நிதி நிறுவன கொள்ளைச் சம்பவம் தொடர்பில் அறுவர் கைது
மொரட்டுவை பகுதியிலுள்ள நிதி நிறுவனமொன்றில் கொள்ளையிட்டதாகக் கூறப்படும் பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அண்மையில் நிதி நிறுவனத்திற்குள் புகுந்த கொள்ளையர் கோஷ்டி அங்கிருந்த ஊழியர்களை துப்பாக்கி முனையில் அச்சுறுத்திவிட்டு கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டது.

சம்பவம் தொடர்பாக ஏற்கனவே இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்த சந்தேகநபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை அடுத்து, ஏனைய சந்தேகநபர்களை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களில் இரண்டு பெண்களும் அடங்குவதுடன், கைதானவர்கள் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டிருப்பதாக பொலிஸார் மேலும் கூறினர்.

Related

தலைப்பு செய்தி 595484676326081717

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item