காதலிக்காக பெண் வேடமணிந்து பரீட்சை எழுதச் சென்ற இளைஞர் கைது
கஸகஸ்தான் நாட்டில் அயன்ஸ்டேமோவ் என்ற 20 வயது இளைஞர் தன் காதலிக்காக அவர் போல் பெண் வேடம் அணிந்து பரீட்சை எழுதச் சென்றுள்ளார். எனினும், பரீ...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_84.html

கஸகஸ்தான் நாட்டில் அயன்ஸ்டேமோவ் என்ற 20 வயது இளைஞர் தன் காதலிக்காக அவர் போல் பெண் வேடம் அணிந்து பரீட்சை எழுதச் சென்றுள்ளார்.
எனினும், பரீட்சை அறையிலிருந்த கண்காணிப்பாளர் அவர் மீது சந்தேகப்பட்டு நடத்திய விசாரணையில் பிடிபட்டுள்ளார்.
ஒரு ஆணுக்கு பதில் இன்னொரு ஆண், அல்லது ஒரு பெண்ணுக்கு பதில் இன்னொரு பெண் ஆள்மாறாட்டம் செய்து பரீட்சை எழுதியதை நாம் கேள்விப்பட்டிருப்போம்.
ஆனால், ஒரு பெண்ணுக்கு பதில் ஒரு ஆண், பெண் வேடம் அணிந்து ஆள்மாறாட்டம் செய்து பரீட்சை எழுத முயற்சித்திருப்பது இதுவே முதல் முறை என கஸகஸ்தான் நாட்டின் பரீட்சைகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட அயன்ஸ்டேமோவ் என்ற அந்த இளைஞருக்கு 2,80,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


Sri Lanka Rupee Exchange Rate