AH1N1 இன்புளுயன்சா பரவல்; அறிகுறிகள் தென்பட்ட 24 மணித்தியாலங்களில் வைத்தியரை நாடவும்
பொதுவான நோய் அறிகுறிகளுடன் AH1N1 இன்புளுயன்சா வைரஸ் பரவிவருவதாக சுகாதார ஆய்வு நிறுவனம் தெரிவித்தது. காய்ச்சல், தலைவலி, உடல் வலி, தொண்டை ...
http://kandyskynews.blogspot.com/2015/06/ah1n1-24.html
காய்ச்சல், தலைவலி, உடல் வலி, தொண்டை வலி, இருமல், தும்மல், வாந்தி மற்றும் வயிற்றோட்டம் ஆகிய நோய் அறிகுறிகள் காணப்படும்.
கடந்த இரண்டு மாதங்களாக இந்த நோய் அறிகுறிகளுடன் அதிக எண்ணிக்கையானோர் பதிவாகியுள்ளதாக சுகாதார ஆய்வு நிறுவனத்தின் பணிப்பாளர் டொக்டர் R.D.F.C.காந்தி குறிப்பிட்டார்.
AH1N1 வைரஸ் தாக்கத்தில் இருந்து 2 வயதுக்குக் குறைவான குழந்தைகள், கர்பிணிப்பெண்கள் மற்றும் 65 வயதுக்கும் அதிகமானவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என சிறுவர் நோய் தொடர்பான விசேட நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா வலியுறுத்தினார்.
நோய் அறிகுறிகள் தென்பட்ட 24 மணித்தியாலங்களில் அருகிலுள்ள வைத்தியரை நாடுவது அவசியமாகும்.
சனநெரிசல் மிக்க இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்தல், அடிக்கடி கைகளை சவர்க்காரமிட்டு தூய்மையான நீரில் கழுவுதல், மூக்கு மற்றும் வாயை அடிக்கடி பிடிப்பதை தவிர்த்தல் ஆகிய நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் இந்த நோய் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியுமென சுகாதார தரப்புகள் அறிவுறுத்தியுள்ளன.
இதுதவிர, போஷாக்கான உணவுகளை உட்கொள்ளல், நீராகாரத்தை அதிகளவு அருந்துதல், நன்றாக ஓய்வெடுத்தல் மூலமும் AH1N1 இன்புளுயன்சா வைரஸ் தொற்றுவதிலிருந்து தற்காத்துக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.