காதல் மனைவியுடன் கலக்கிய வாசிம் அக்ரம்: புத்துணர்வு பெற்ற வாழ்க்கை

சொந்த வாழ்க்கையில் பல சோகங்களை சந்தித்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் வாசிம் அக்ரமுக்கு இப்போது தான் வாழ்க்கையில் புத்துணர்வு ஏற்பட்ட...

wasim_001
சொந்த வாழ்க்கையில் பல சோகங்களை சந்தித்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் வாசிம் அக்ரமுக்கு இப்போது தான் வாழ்க்கையில் புத்துணர்வு ஏற்பட்டுள்ளது.
அவர் கிரிக்கெட்டில் கலக்கிக் கொண்டிருக்கும் போது 30வது வயதில் அவருக்கு சர்க்கரை நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இருப்பினும் முறையான உடற்பயிற்சி மூலம் சர்க்கரை நோயை விரட்டி கிரிக்கெட்டில் சாதித்தார்.
இந்நிலையில் கடந்த 1995ம் ஆண்டு ஹீயூமா என்பவரை வாசிம் அக்ரம் திருமணம் செய்தார். இவருக்கு 2 ஆண் குழந்தைகள் உண்டு. அப்போது ஹியூமாவை புற்றுநோய் தாக்கியது.
வாசிம் அக்ரம் கடும் முயற்சி செய்தும் கடந்த 2009ம் ஆண்டு சென்னை அப்பலோ மருத்துவமனையில் ஹியூமாவின் உயிர் பிரிந்தது.


அதற்கு பின் குழந்தைகளை அவரே வளர்த்து வந்தார். இதன் பின்னர் அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஷெனிரா தாம்ப்சனுடன் காதல் ஏற்பட்டு அவரை கடந்த 2013ம் ஆண்டு வாசிம் அக்ரம் திருமணம் செய்தார்.
இந்நிலையில் கராச்சி நகரில் நேற்று நடந்த பிரிடல் ஃபேஷன் பரேடில் வாசிம் அக்ரம் அவரது மனைவி ஷெனிரா ஆகியோர் பாகிஸ்தானின் பாரம்பரிய உடையில் வலம் வந்து கலக்கினர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது.
சோகங்களால் கலையிழந்த வாசிம் அக்ரமின் முகத்தில் இப்போது தான் சிரிப்பை பார்க்க முடிகிறது.

Related

விளையாட்டு 2897960125690146401

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item